டிவி மூலம் மறு மணம் - சுயம்வரத்திற்குத் தயாராகும் ராகுல் மஹாஜன்

இருப்பினும், ராக்கி சாவந்த்தைப் போல அல்லாமல் தனது நிகழ்ச்சி உண்மையான திருமணத்தில் முடியும் என உறுதியாகக் கூறுகிறார் ராகுல் மஹாஜன்.
ராகுல் துல்ஹனியா லே ஜாயகா என்ற பெயரில் இந்த சுயம்வர நிகழ்ச்சி என்டிடிவி இமேஜின் சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மஹாஜனை கணவனாக அடைய விரும்பி சுயம்வரத்தில் கலந்துகொள்ள நாடுமுழுவதிலும் இருந்து சுமார் 16 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.
இதில் பல அம்சங்களின் அடிப்படையில் 15 பெண்களை மட்டும் தேர்வு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்துள்ளனர். இவர்களில் 7 பேர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மாடலிங், டிவி தொகுப்பாளினி, சட்டக்கல்லூரி மாணவி, பா.ஜ.க மகளிரணி உறுப்பினர் என பல்வேறு தரப்பினர் இதில் அடக்கம்.
நிகழ்ச்சியில் படிப்படியான 'வடிகட்டல்'களுக்கு பிறகு இறுதியாக தன வாழ்கைத் துணையை முடிவு செய்ய உள்ளார் ராகுல் மஹாஜன்.
டிவி மூலம் பெண் தேடவேண்டிய அவசியம் குறித்து அவர் கூறுகையில்,
எனது முதல் திருமணத்தின் போது மீடியா என்னை நிம்மதியாக விடவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு பிரைவசியே இல்லாமல் இருந்தது.
என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எல்லாவற்றையும் மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டி வந்தன. இந்நிலையில் நான் 2வது திருமணத்தை எப்படி நடத்தினாலும் அதை மீடியாக்கள் ஊதி பெரிதாக்கும்.
பல சேனல்களிலும் அந்த செய்தி வருவதற்கு பதிலாக இப்போது ஒரே சேனலில் என் திருமணம் வைபவம் காட்டப்படும்.
ஆனால், எனது இந்த சுயம்வர நிகழ்ச்சி ராக்கி சாவந்த் போன்றது அல்லாமல் நிஜமான முறையில் நடக்கும். நிகழ்ச்சி திருமணத்தில் தான் முடியும்.
மணமகளிடம் இருந்து மூன்று அம்சங்களை எதிர்பார்க்கிறேன். நேர்மை, போலியில்லாத சுபாவம், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை தான் நான் எதிர்பார்க்கிறேன்.
நான் மறுமணம் செய்து கொள்வதை என் தந்தை உயிரோடு இருந்தால் மகிழ்ச்சியுடன் சம்மதம் சொல்வார். அவரின் விருப்பத்துக்கு ஏற்றபடி தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்' என்றார்.
ஏற்கனவே பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருந்தார் ராகுல். ஆனால் அங்கு சர்ச்சை ஏற்பட்டு வெளியேறினார்.
ராகுல் மஹாஜனுக்கும், அவரது தோழி ஸ்வேத்தா சிங்க்கும் நடந்த திருமணம் படு வேகமாக தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில்தான் தற்போது மறு மணத்திற்குத் தயாராகியுள்ளார் ராகுல்.












Click it and Unblock the Notifications