கள்ளழகர் எதிர்சேவை- மதுரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வரவேற்பு
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கள்ளழகர் எதிர்சேவை இன்று மதுரையில் வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.
மதுரை சித்திரைத் திருவிழா நிறைவுக் கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை உச்ச கட்ட நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கவுள்ளது.
மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம், மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து திருவிழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும் அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன.
எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், தேர்களை புனிதப்படுத்தவும் அதிகாலை 4 மணிக்கு தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை செய்யப்பட்டது. தேர்களை பாதுகாக்கும் தேரடி கருப்பு சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு பூஜை செய்து சுவாமியை பெரிய தேரிலும், அம்மனை சிறிய தேரிலும் எழுந்தருள செய்தனர்.
மாசி வீதிகளில் வலம் வந்து, காலை 11.45 மணிக்கு பெரிய தேரும், 11.50 மணிக்கு சிறிய தேரும் அடுத்தடுத்து நிலைக்கு வந்தன. பிற்பகல் 3 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கீரிடம் மற்றும் தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தேர்களில் வீற்றிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவித்து, கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக நேற்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் அம்மனும், சுவாமியும் உலா வந்தனர். கோவிலுக்கு திரும்பிய பின் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று கோவில் பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன் 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
தல்லாகுளத்தில் எதிர்சேவை
இந்த நிலையில், கள்ளழகர் திருக்கலோத்தில் அழகர் பெருமான் இன்று மதுரை நகருக்குள் பிரவேசித்தார். தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண மதுரைக்கு வருகிறார் அழகர். ஆனால் அவர் வருவதற்குள் திருமணம் முடிவடைந்து விடுவதால் அவர் கோபம் கொண்டு மதுரைக்குள் வராமல் ஆற்றோரமாகவே திரும்பிப் போய் விடுவதாக ஐதீகம்.
மதுரைக்கு வரும் அழகருக்கு நகரின் எல்லையில் வரவேற்பு அளிக்கப்படும். இதற்கு எதிர்சேவை என்று பெயர்.
இன்று காலை மதுரை நகரின் எல்லைப் பகுதியான மூன்று மாவடிக்கு அழகர் வந்து சேர்ந்தார். அங்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தேறியது. தொடர்ந்து புதூர், ரிசர்வ் லைன் உள்ளிட்ட இடங்களிலும் எதிர்சேவை நடந்தது.
இறுதியாக இன்று இரவு தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெறுகிறது. இதையடுத்து நாளை காலை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications