ரூ. 15 லட்சம் செலவில் மறைமலையடிகள் இல்லம் புதுப்பிப்பு – அரசு அறிவிப்பு
சென்னை: சென்னையில் உள்ள மறைமலையடிகளால் நினைவில்லம் ரூ. 15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது. சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இதை அறிவித்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வாழ்ந்து மறைந்த இல்லம், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் அமைந்துள்ளது. அந்த இல்லம் மறைமலையடிகளார் நினைவு இல்லமாக இப்போது தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பில் உள்ளது.
இந்தக் கட்டடம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த இல்லத்தைப் பழுது பார்க்க, தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.15 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
இந்தத் தொகை பொதுப்பணித் துறைக்கு அளிக்கப்படும். இந்தத் தொகை மூலம் நினைவு இல்லம் பழுது பார்க்கப்பட்டு, சீரமைத்து தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications