மாதான அமிர்தானந்தமயி தமிழகம் வருகிறார்

Subscribe to Oneindia Tamil

Mata Amritanandamayi
கோயம்பத்தூர்: மாதா அமிர்தானந்த மயி தமிழகம் வருகிறார். ஜனவரி 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள அமிர்தானந்தமயி மடத்தில் ஜன.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரம்மஸ்தான மகோத்சவ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

அந்த இரு நாட்களிலும் அமிர்தானந்தமயி தேவியின் சத்சங்கம், பஜனை, தியானம், தரிசனம் மற்றும் ராகு, சனி தோஷ நிவாரண பூஜைகள் நடைபெறும். காலை முதல் மாலை வரை லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறும்.

ஜன.14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் பிரம்மஸ்தான விழாவில் பங்கேற்கிறார்.

17ம் தேதி தஞ்சை, 19ம் தேதி ராமநாதபுரம், 21ம் தேதி தூத்துக்குடி ஆகிய ஊர்களில் நடைபெரும் நிகழ்ச்சிகளில் அமிர்தானந்த மயி பங்கேற்கிறார்.

மாதா அமிர்தானந்த மயி சுற்றுப்பயணம் குறித்த விவரம் அறிய வேண்டுவோர், மாதா அமிர்தானந்தமயி மடம், ராமசாமி நகர், நல்லாம்பாளையம், கோவை என்ற முகவரி அல்லது, 0422-2538325, 2538586 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+