'வெங்கி' ராமகிருஷ்ணனுக்கு பத்மவிபூஷன்: இளையராஜா-ரஹ்மானுக்கு பத்மபூஷன்!

Subscribe to Oneindia Tamil

Illayaraja and AR Rahman
டெல்லி: நோபல் பரிசு வென்ற தமிழரான லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், உமையாள்புரம் கே.சிவராமன், லண்டனைச் சேர்ந்த பிரதாப் சந்திர ரெட்டி ஆகிய தமிழர்கள் உள்பட 6 பேர் இந்தாண்டுக்கான பத்ம விபூஷன் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நாராயணன் வகுல் ஆகியோர் உள்பட 43 பேர் பத்ம பூஷன் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி, டாக்டர் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் டி.என். மனோகரன், தொழிலதிபர் வேணு சீனிவாசன், டாக்டர் ரங்கநாதன் பார்த்தசாரதி உள்பட 81 பேர் பத்மஸ்ரீ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் இன்று அறிவி்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 130 பேர் இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் அமீர் கான் பத்ம பூஷன் விருது பெறவும், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், பாட்மின்டன் வீராங்கனை சானியா நெஹ்வால், இந்தி நடிகை ரேகா, நடிகர் சைப் அலி கான், குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விஜய்க்கு கிடைக்கவில்லை...

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரது பெயர் விருதுப் பட்டியலில் இடம் பெறவில்லை.

14 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது:

இந் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மூவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சி.வி. ராவ், ஐ.ஜி, ரயில்வே போலீ்ஸ், சென்னை, டி.கே. ராஜேந்திரன், ஐ.ஜி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சென்னை, எஸ். மாணிக்க ராவ், துணை ஆணையர், குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து, திருநெல்வேலி உள்பட 14 பேர் இந்த விருது பெற தேர்வாகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+