பரம்பிக்குளம்: புலிகள் சரணாலயமாக அறிவிப்பு

மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில்,
கேரளாவில் ஏற்கெனவே பெரியார் வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் வனப் பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 24 புலிகள் உள்ளது தெரியவந்துள்ளது.
பரம்பிக்குளம் விலங்குகள் சரணலாயம் 390 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இது மிகவும் அடர்ந்த காடு இதில் சாலக்குடிக்கும் நெமராவுக்கும் இடையே உள்ள காட்டுப் பகுதி புலிகள் வாழ்விடமாகவும் இனப் பெருக்கத்துக்கும் உகந்த இடமாக உள்ளது.
எனவே பரம்பிக்குளம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
இப்பகுதியில் இருந்த பழங்குடி மக்களுக்கு உரிய மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும். பரம்பிக்குளம் வனப்பகுதியில் உள்ள 73 குடும்பங்கள் வேறு இடத்துக்கு குடிபெயர்வதற்காக தலா ரூ. 10 லட்சம் அளிக்கப்பட உள்ளது.
மேலும், புலிகளை பராமரிப்பதற்காக கேரள மாநிலத்துக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications