எஸ்எஸ்எல்சி தேர்வு-மகள் பாஸ்'-தந்தை பெயில்'!
Subscribe to Oneindia Tamil
சீர்காழி: ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தந்தை, மகள் ஆகியோரில் மகள் பாஸ் ஆனார். ஆனால், தந்தை பெயிலாகிவிட்டார்.
சீர்காழி அருகே வேட்டங்குடியைச் சேர்ந்த மாரிமுத்து (36) நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக உள்ளார்.
இவரது மகள் சுபஸ்ரீதேவி வடகால் ரஹ்மானிய உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். மாரிமுத்துவும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத ஆசைப்பட்டார்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இருவருமே எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வந்தபோது சுபஸ்ரீதேவி 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால், அவரது தந்தை மாரிமுத்து தேர்வில் தோல்வியடைந்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ்-37, ஆங்கிலம்-26, கணிதம்-17, அறிவியல்-35, சமூக அறிவியல்-35, மொத்தம்-150


Click it and Unblock the Notifications
