செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கையெழுத்து பிரதி தமிழ் இலக்கியங்கள்
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கையெழுத்து பிரதி தமிழ் இலக்கியங்களை கோவையைச் சேர்ந்த இருவர் உருவாக்கி வருகின்றனர்.
தமிழ் இலக்கியங்கள் பால் மக்களிடம் ஆர்வத்தை உருவாக்க கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஒரு நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஏ.பி.பவுண்டரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கோவை மாவட்ட துணை செயலாளருமான பெ.சக்திவேல் மற்றும் காரமடையைச் சேர்ந்த ஓவியர் பாவு சார்லஸ் ஆகிய இருவரும் இணைந்து எட்டாயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு தமிழ் இலக்கிய தொகுப்பு நூலை கையெழுத்து பிரதியாகவே உருவாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ் இலக்கியம் மக்களை சென்றடையாமல் உள்ளது. தொழில்நுட்பமும், ஆங்கில மயமும் அதிகரித்து வருகின்றது.
இந்த சூழலில் எங்களின் இந்த சிறிய முயற்சி மக்களிடம் தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கப் பயன்படும் என்று நம்புகிறோம்.
மனோன்மணியம் சுந்தரனார், தாயுமானவர், மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பெரிய புராணம், திருக்குறள் துவங்கி, சிற்றிலக்கியங்கள், பாரதியார் கவிதைகள், இசைத்தமிழ், நாட்டுப்புறத் தமிழ், கலைஞரின் குறளோவியம், ஜெயகாந்தன் படைப்புகள், சிற்பி, புவியரசு, மு.மேத்தா, அப்துல் ரகுமான் போன்றோர் படைப்புகள் வரை மொத்தம் 35 நூல்களை ஒரே நூலாக தொகுக்க உள்ளோம். இந்த நூலுக்கு அருந்தமிழ் என்று பெயர் வைத்துள்ளோம் என்றார்.
மே 2 ம் தேதி (ஞாயிறு) அன்று காலை 11 மணிக்குத் துவங்கிய இவர்களின் தொகுப்பு நூல் உருவாக்கும் பணியை வருகிற ஜூன் 13 ஆம் தேதி நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் இவர்களின் முயற்சி வெற்றியடையும்பட்சத்தில் உலகிலேயே அதிக பக்கங்கள் கொண்ட நூல் என்ற பெருமையை இது பெறும் .
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications