For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸாரைத் தாக்கிய திருவண்ணாமலை கலெக்டருக்கு காந்தி விருது

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் காங்கிரஸாரைத் தாக்கியதாக சர்ச்சைக்குள்ளான கலெக்டர் ராஜேந்திரனுக்கு காந்தி விருது கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை நகரில் காந்திய பேரவையின் 19ம் ஆண்டு விழா 18, 19ம் தேதி என இரண்டு தினங்கள் நடந்து வருகிறது. இந்த பேரவையினை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், போளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.விஜயகுமார் நடத்தி வருகிறார்.

இப்பேரவையின் சார்பில் இன்று 5 பேருக்கு காந்திய விருது. வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனுக்கும் இவ்விருது வழங்கப்பட போவதாக அறிவித்துள்ளது காந்திய பேரவை.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு காந்திய விருது பெற போகும் இதே மாவட்ட ஆட்சித்தலைவர் கேள்வி கேட்க போன காங்கிரஸ் பிரமுகர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து சர்ச்சையை ஏற்படுத்தி பெரும் பிரச்சனையானது.

இந்த அடிதடி பிரச்சனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸார் சாலை மறியல் செய்தனர், இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் இயற்றியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏவுமான விஜயகுமார் நடத்தும் ஒரு காந்திய பேரவை, அகிம்சையை போதித்த காந்தி பெயரிலான விருதை அதற்கு நேர்மாறாக விளங்கும் ஒரு அதிகாரிக்கு அவ் விருது வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tniruvannamalai collector Rajendiran selected for Gandhi peace award by Gandhi peravai led by Congress MLA Vijayakumar. This has created a rucukus in the city. Recently Colletor Rajendiran involved in a clash with congress men. He was charged for beating the congress cadres in govt function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X