துபாய்: அமீரக தமிழ் மன்றத்தின் 10ம் ஆண்டுவிழா

Subscribe to Oneindia Tamil

துபாய்: கணினியில் தமிழைப் பரவலாக்கும் பணியில் கடந்த பத்து ஆண்டுகளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா துபாய் பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

அமீரகத் தமிழ் மன்றத்தினர் வேட்டி சட்டை அணிந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் துவங்க பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் நடனங்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

நிகழ்ச்சியை அமைப்பின் இணைச் செயலாளர் ஜெஸிலா தொகுத்து வழங்கினார். நடனங்களுக்குப் பிறகு கணினியில் இலவச மென்பொருட்களைக் கொண்டு தமிழை உள்ளீடு செய்வது குறித்த செயல்முறை விளக்கம் ஒலி ஒளிக்காட்சியாக வழங்கப்பட்டது.

இந்நிகழவை தொகுத்து வழங்கிய அமைப்பின் தலைவர் ஆசிப் மீரான் அமீரகத் தமிழ் மன்றம் மீண்டும் விரைவில் கணினிப் பட்டறை நிகழ்த்தவிருப்பதால் தேவைப்படுபவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து நிகழந்த பலகுரல் நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ரோபோ சங்கர் பார்வையாளர்களை மகிழ வைத்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களான அழகர்மலை ஆர்கே, நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, ஈடிஏ குழும மின் மற்றும் இயந்திரவியல் துறை இயக்குனர் அன்வர் பாஷா ஆகியோர் வந்திருந்தனர்.

தொடர்ந்து ஆண்டுவிழா மலரை ஆசிப் மீரான் வெளியிட்டார். நிகழ்ச்சியின்போது தமிழகத்திலிருந்து கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார், கவிக்கோ அப்துல் ரஹ்மான், நடிகர் சிவக்குமார், இயக்குனர் மீரா. கதிரவன், கலைஞானி கமல்ஹாஸன் ஆகியோர் அமீரகத் தமிழ் மன்றத்திற்கு வழங்கிய வாழ்த்துரைகளின் காணொளி ஒளிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கை சுவையானதா அல்லது சுமையானதா என்ற தலைப்பில் இவர்களா அவர்களா நிகழ்ச்சியை நீயா நானா புகழ் கோபிநாத் நடத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் பார்வையாளர்களுக்கான அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்ச்சிக்குப் பிறகு அமைப்பின் ஆலோசகர் அகமது முகைதீன் நன்றி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+