கோவையில் செம்மொழி கலை விழா கோலாகலமாக தொடங்கியது

கோவையில் 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குகிறது. இதையொட்டி அங்கு அறிஞர்கள் உள்ளிட்டோர் குவிந்து வருகின்றனர். ஏராளமான மக்களும் கோவையில் குவிந்து வருகின்றனர்.
இதையடுத்து அவர்களை மகிழ்விப்பற்காக செம்மொழிக் கலை விழா நேற்று தொடங்கியது. கோவை - காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கலைவிழாவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார். இந்த கலை விழாவில் கரகாட்டம், நையாண்டி மேளம், பறையாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழச்சிகள் இவ்விழாவில் நடைபெற்று வருகின்றன.
இந்கதக் கலை விழா காந்தி பூங்கா, வடவள்ளி மருதமலை ஆண்டவர் மேல்நிலைப் பள்ளி, சாயிபாபா காலனி டி.ஏ.ராமலிங்கம் பள்ளி, சிங்காநல்லூர் சாலை என்.ஜி.ராமசாமி பள்ளி, கணபதிநகர் சத்தி சாலை சி.எம்.எஸ். பள்ளி, ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செல்வபுரம் சிருஷ்டி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, துடியலூர் ஐ.டி.ஐ. தொழில்நுட்பப் பயிலகம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம் ஆகியவற்றிலும் நடைபெற்றன.
மாநாடு தொடங்கும் வரை இந்த இடங்களில் நடைபெறும். பின்னர் வியாழன் முதல் சனிக்கிழமை வரை கொடிசியா அரங்கிலும் இந்த கலை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய செம்மொழிக் கலை விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர்.


Click it and Unblock the Notifications
