பள்ளிகளில் செம்மொழிப் பாடல்-டிவிடி பிளேயர் இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்களே பாடினர்
நெல்லை: நெல்லை மாவட்ட பள்ளிகளில் இன்று காலை உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் ஒளிபரப்பப்பட்டது. சிடி, டிவிடி பிளேயர் இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்களே பாடினர்.
உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வருகிற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் ஏஆர் ரஹ்மானின் இசையில் தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இனிமையான இசை, தமிழ் மொழியின் அருமை, பெருமைகளை விளக்கி பாடியுள்ள இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த பாடலை மாணவ, மாணவிகள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக சிடி வடிவில் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
ஒவ்வொரு நாளும் அனைத்து நர்சரி, தொடக்க,நடுநிலை. உயர் நிலை, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளிகளில் இறைவணக்கத்தின்போது தமிழ்தாய் வாழ்த்து பாடிய பின்னர் செம்மொழி மாநாட்டு பாடலை ஓளிபரப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நேற்றே சிடி அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை அனைத்து பள்ளிகளிலும், செம்மொழி மாநாட்டு பாடல் ஒளிப்பரப்பப்பட்டது. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பாடலை ரசித்தனர். ஒரு சில பள்ளிகளில் சிடி பிளேயர் இல்லை என்றாலும் பாடலை ஆசிரியர்களே பாடினர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்லூரி அலுவலர் மேரி ஜேசி ரோச் கூறுகையில், தமிழ் செம்மொழியின் பெருமைகளை விளக்கும் பாடல்கள் அனைத்து பள்ளிகளிலும் இன்று ஒளிபரப்பப்பட்டது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications