துபாயில் நடந்த மங்காத்தாவில் மகாபாரதம்-காமெடி நாடகம்

இந்நாடகத்திற்கு அமீரக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக வந்து ஆதரவு தந்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூக நல மைய (ஐசிடபுள்யூசி) கன்வீனரும், சாத்தி அமைப்பின் தலைவருமான திரு.குமார் மற்றும் துபாய் எஸ். பி.ஜெயின் மேனேஜ்மென்டின் துணை தலைவர் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஆபிரகாம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் "மோகனா" குழுவினரின் தமிழ்த் தாய் வாழ்த்து அருமையான துவக்கமாக அமைந்தது. இதை தொடர்ந்து துபாய் தமிழ் பெண்கள் சங்கத்தின் சிறுவர் சிறுமியரின் "அன்றும்- இன்றும்" நடனம் காண்போர் கண்களைக் கவர்ந்தது.
இதை தொடர்ந்து அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட " மங்காத்தாவில் மகாபாரதம்" நாடகம் அரங்கேறியது. இந்த நாடகத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் ஸ்ரீராமா ஸ்ரீனிவாசன்.
மகாபாரத காலத்திலல் இருந்து இன்றிருக்கும் சென்னைக்கு கால எந்திரத்தில் செல்வது இந்த நாடகத்தின் மூல கதையாக அமைந்திருந்தது. மேடை அமைப்பு மிகவும் அருமையாகவும், பாடல் காட்சிகள் அற்புதமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் நடித்த ஆனந்த் பரதன், ஆனந்த் சுப்ரமணியன், பகவதீஷ்வர் சுப்பிரமணியம், காயத்ரி சந்திரசேகர், முரளிதர் ராமலிங்கம், சந்தான கிருஷ்ணன், ஸ்ரீகாந்த் ராமசந்திரன், சுதர்ஷன் சக்ரவர்த்தி, ஸ்ரீ ராமா ஸ்ரீனிவாசன், தியாகராஜன் வெங்கடேசன், நீலகண்ட ரத்தினம், வேணுகோபால் ராமன் ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களுக்கு உயிரளித்தனர்.
இது துபாய் ப்ளேயர்சின் நடத்திய மூன்றாவது நாடகம் ஆகும். முன்னதாக அந்த குழுவினர் "அவதார புருஷன்" மற்றும் "நியூயார்க் ப்ளேனில் நவரத்ன குருமா" என்ற இரண்டு நாடகங்களை மேடையேற்றி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்வேர்ல்டு குரூப் முதன்மை அணுசரணையும், உப அனுசரணையினை அல் ரோஸ்தமானி இண்டர்னேஷனல் எக்ஸ்சேஞ்சும் செய்திருந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications