இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்மணிக்கு சிலை: 34 எம்.பி.க்கள் ஆதரவு

சர்ச்சிலின் உளவு பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர் நூர் இனாயத் கான். கான் 1914-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி மாஸ்கோவில் இந்திய தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்தார்.
அவர் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல் வீரப்போர் புரிந்து மாண்ட திப்பு சுல்தான் பரம்பரையில் வந்தவர். அவரது தந்தை ஒரு இந்திய முஸ்லிம் போதகர். அவர்கள் குடும்பத்துடன் முதலில் லண்டனிலும், பிறகு பாரிஸிலும் வசித்தனர்.
கான் தனது படிப்பை முடித்த பிறகு குழந்தைகள் கதைகள் எழுதி வந்தார். பிரான்ஸை நாஜி படை ஆக்கிரமித்தபோது அவர் பாரிஸில் மாடலின் என்ற பெயரில் வானொலி இயக்குநராக பணியாற்றினார். அங்கிருந்து லண்டனுக்கு ரகசியத் தகவல்கள் அனுப்பி வந்தார்.
அப்போது நாஜி படையினர் பல உளவாளிகளை கைது செய்தனர். இதையடுத்து கான், லண்டன் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார். தனது தோற்றத்தையும், பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொண்டு அந்த ஆபத்தான காலகட்டத்திலும் லண்டனுக்கு தகவல்கள் அனுப்பினார்.
அவரை ஒரு பிரெஞ்சு பெண்மணி ஹிட்லரின் ரகசிய போலீசான கெஸ்டபோவிடம் காட்டிகொடுத்தார். இதையடுத்து கெஸ்டபோ, கானை கைது செய்து சங்கிலியிட்டு சிறையில் அடைத்தது. அவர்கள் எவ்வளவோ கொடுமைபடுத்தியும் கான் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதன் பின்னர் ஜெர்மன் படையினர் அவரை 1944-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர்.
கானின் வாழ்க்கை வரலாறு பற்றி 8 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுள்ள ஷ்ரபானி பாசு இங்கிலாந்துக்காகவே வாழ்ந்து மறைந்த கானுக்கு அவர் குழந்தையாக இருக்கையில் வாழ்ந்த புளூம்ஸ்பரியில் ஒரு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இவருக்கு 34 இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிலை வைப்பதற்காக பாசு ரூ. 70,31,931 நிதி திரட்டவுள்ளார். பாசுவின் இந்த முயற்சிக்கு இங்கிலாந்து வாழ் ஆசிரியர்கள் ஆதரவாக உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications