களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட கடும் கட்டுப்பாடுகள்
களக்காடு: களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக புலிகள் காப்பாக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
களக்காடு தலையணையி்ல் வரும் 16-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து களக்காடு புலிகள் காப்பாக இணை இயக்குனர் சத்தியநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
வனப்பகுதியில் அமைதி, ஒழுக்கம் காக்க வேண்டும். விலங்குகளை விரட்டவோ, துன்புறுத்தவோ கூடாது. சத்தம் எழுப்பும் கருவிகளை கொண்டு வரக் கூடாது. மது பாட்டில்கள், வெடி பொருட்கள், ராசாயனப் பொருட்கள், தீப்பெட்டிகள், பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரக் கூடாது. வனப்பகுதியில் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் நபர் ஒருவருக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.25, வீடியோ கேமராவுக்கு ரூ.150, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5, கார்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.2 என நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். விதிகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பச்சையாற்று பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலையணை நுழைவு கேட் அருகே சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகிறார்களா என்பதை கண்டறிய சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications