For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம்

Google Oneindia Tamil News

வெறும் நெற்றி பாழ் என்பது முன்னோர் சொல். இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்கள் திருநீறும், வைணவத்தை பின்பற்றுபவர்கள் திருமண்ணால் நாமமும் இட்டுக்கொள்வது மரபு. இதன் தத்துவத்தை தெரிந்து கொள்வோம்.

திருநீறு

"மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு" என்று திருஞானசம்பந்தர் பாட்டு பாடி கூன் பாண்டியனின் சூலை நோயை துரத்தினார் .

வாதவூர் புராணம் ப்ரமோத்த காண்டம் திருநீற்றின் பெருமையை மிக பிரமாதமாய் கூறுகிறது!

விறகுக்கட்டையை நெருப்பு சாம்பலாக்குகிறது. அது போல ஞானம் என்னும் நெருப்பு, எல்லாக் கர்மாக்களையும், எரித்து விடும். என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறார். நாம் நெற்றியில் பூசும் விபூதி ஞானத்தின் அடையாளம் என்பது சமய நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.

திருமண்

நெற்றியில் திருமண் இடுவதற்கு நாமம் போடுவது என்று பெயர். திருமண் என்னும் திருநாமம் நாராயணனின் பாதங்களை குறிக்கும். நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதார கருத்து.

ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது. இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும். துணியை வெளுப்பது உவர் மண். மனதை வெளுப்பது திருமண்.

இந்த மண்ணை பகவானின் பாதமாக மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவு. உலகத்தின் முடிவு என்றோ ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதை தானும் உணர்ந்து எல்லோருக்கும் உணர்த்துவது தான் திருநாமத்தின் ரகசிய தத்துவம்.

English summary
This difference, between ''syvam'' and ''vaishnavam', is not only now but in the past history of india itself.Many quarrels, revengeful wars, and severe punishments were out come of these divisions.Added to this in namam they have 2 groups- 'vadakalai' and 'thenkalai' Kings of those days danced to the tunes of the saints of these two divisions [saivam - vaishnavam] and punished the one they don't like.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X