காதலும் கனவுகளும்…..

தாமரை இலைகளில்
தைத்த மெத்தை
தடாகத்தின் நடுவே போட்டிருக்க
நாம் இருவர் மட்டும்
தனிமையில் அமர்ந்து
பேசிக் களித்திருப்போம்...
சத்தமில்லாத முத்தத்தை
நீ கேட்க
தண்ணீருக்குத் தெரியாமல்
எப்படி தருவது
என்று நான் தடுமாற
நமக்குள் அங்கே
பொய்யாய் ஒரு போராட்டம்...
நள்ளிரவு தண்டியும்
நடக்கிறது சண்டை….
மடியில் தலைவைத்து
படுத்துக் கொண்டே
வானில் இருக்கும்
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கிறாய்…
அன்று அமாவாசையாம்
யார் சொன்னது?
அதுதான் முழுச்சந்திரன்
என் மடியில் கிடக்கிறதே!
மயக்கத்தில் கிடக்கும் போதும்
மழை பற்றிய பேச்சு வருகிறது
அழைத்தீர்களா என்ன?
என்றபடியே வந்து
தூறல் போடுகிறது வானம்…
விடிய விடிய மழையில்
நனைந்து கொண்டே
நடுக்கத்தில் கிடக்கிறோம் நாம்…
அதிகாலை வரை தொடர்கிறது மழை….
ஆளில்லா கானகத்தில்
பறவையின் கூடு தேடி
புலம் பெயர்கிறோம்….
எத்தனை நாள் இப்படியே இருப்பது?
உன் மார்பில் சாய்ந்தவாரே
நான் கேட்க
திடுக்கிட்டு கண் விழிக்கிறாய் நீ
நம் இருவருக்குமே
ஒரே கனவு
இதில் கூட என்ன ஒரு ஒற்றுமை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications