கொடைக்கானலில் 2வது 'ஜில்' சீசன்- புதுமணத் தம்பதிகள் படையெடுப்பு!

களை கட்டிய ஆப் சீசன்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகுக்குப் பஞ்சமில்லை. காணும் இடமெங்கும் பசுமையும், ரம்மியமான சூழலும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை சீசன் காலத்தில் கொடைக்கானலுக்கு ஏராளமானோர் சுற்றுலா வருவது வாடிக்கை. செப்டம்பர் மாதம் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கிவிடும். இந்த ஆண்டு பருவமழையின் தாமதத்தினால் அக்டோபர் மாதம் சீசன் களை கட்டியுள்ளது.
ஹனிமூன் தம்பதிகள்
கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா மையங்களான கோக்கர் வாக்ஸ், பசுமை பள்ளத்தாக்கு, வெண் பஞ்சு மேகங்கள் தொட்டு விளையாடும் தூண்பாறை, உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. புதிதாக திருமணமான ஹனிமூன் தம்பதிகள் ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலைகளில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் உற்சாகத்துடன் பொழுதை கழிக்கின்றனர். காலை வேளையில் உடலை வருடும் சில்லென்ற காற்றும், வெயிலுடன் பன்னீர் தூவலாய் பெய்யும் மழையும் தங்கள் பயணத்தை இனிதாக்கியிருப்பதாக தெரிவித்தனர் ஹனிமூன் தம்பதிகள்.
வியாபாரிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் நிலவும் இதமான ஆப் சீசனை அனுபவிக்க புதுமணத்தம்பதிகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவிகளும் குவிந்து வருவதால் அங்கு சுற்றுலா தொழில் விறுவிறுப்படைந்துள்ளது. விற்பனை வருமானம் அதிகரித்துள்ளதால் சாலையோர சிறு வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications