குற்றாலம் சாரல் திருவிழா நாளை துவக்கம்- போட்டிகளுக்கு ஏற்பாடு
குற்றாலம்: குற்றாலம் சாரல் திருவிழா நாளை (23-ம் தேதி) ஆரம்பமாகிறது. இதனையொட்டி பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றாலம் சாரல் விழா கலைவாணர் கலை அரங்கில் நாளை (23-ம் தேதி) மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது. அமைச்சர் கருப்பசாமி தலைமை வகிக்கிறார். சாரல் திருவிழாவை துவக்கி வைத்து அமைச்சர் கோகுல இந்திராவும், கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து அமைச்சர் செந்தூர் பாண்டியனும் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
எம்.பி.க்கள் பால் மனோஜ்பாண்டியன், லிங்கம், எம்.எல்.ஏ. சரத்குமார் முன்னிலை வகிக்கின்றனர். கலெக்டர் நடராஜன் வரவேற்புரை ஆற்றுகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். டி.ஆர்.ஓ. ரமண சரஸ்வதி நன்றி கூறுகிறார்.
இரவில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், கேரள சிங்காரி மேளம், பரதநாட்டியம், ஸ்ரீகாந்த் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. இந்த திருவிழா வரும் 30-ம் தேதி வரை நடக்கிறது. திருவிழா நடக்கும் 7 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடக்கவிருக்கிறது.
வரும் 24-ம் தேதி குற்றாலம் கலைவாணர் அரங்கில் மதியம் 2.30 மணிக்கு ஆணழகன் போட்டி, 25-ம் தேதி மாலை 3 மணிக்கு குற்றாலம் நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி, 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்திய கலச்சார ஆடை, அலங்காரம் மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி, 28-ம் தேதி மதியம் 2 மணிக்கு நாய்கள் கண்காட்சி, 29-ம் தேதி மாலை 3 மணிக்கு பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி அருகில் ரோலர்ஸ்கேட்டிங், 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு படகு குழாமில் படகு போட்டி ஆகியவையும் நடக்கிறது.
வரும் 30-ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவிற்கு கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications