துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

புனித லைலத்துல் கத்ர் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவின் நன்மைகளை அனைவரும் அடைவதற்காகக் கூடியிருக்கிறோம். அதன் பலனை அனைவரும் பெற வேண்டும். மேலும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு நலப்பணிகளை குறிப்பாக நோன்பாளிகளுக்கு தினமும் வழங்கி வரும் நோன்புக் கஞ்சி விநியோகப் பணிகளைப் பாராட்டினார்.
முன்னதாக ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஃரூப் சீருரை ஆற்றினார். அவர் தனது உரையில் புனித ரமலான் மாதத்தை அடைந்துள்ள நாம் இறையச்சமுடையவர்களாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தாயகத்திலிருந்து வந்திருந்த அமீரக சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சிறப்பு அழைப்பாளர் மௌலவி அல்ஹாபிழ் வி.பி. முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் பிலாலி எம்.ஏ. அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ரமலான் மாதத்தில் சிறு சிறு விஷயங்களில் தங்களது கவனங்களை சிதறுவிடுவதை விட்டும் தடுத்துக் கொண்டு அதிகமதிகம் அமல்கள் செய்யக்கூடியவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
குவைத் பள்ளி இமாம் ஷேக் அல் ஹாபிழ் ஈதி அல் ஹபாரி அவர்கள் அரபு மொழியில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மிகுந்த ஆர்வமுடன் புனித இரவின் நன்மைகளை அடையக் கூடியிருக்கும் அனைவரையும் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பின் சார்பில் இமாம் அல் ஹபாரி மற்றும் சிறப்பு அழைப்பாளர் மௌலவி முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். பள்ளியின் இமாம் அல் ஹபாரி அவர்கள் ரமலான் மாதத்தின் 27 தினங்களில் திருக்குர்ஆனை முழுமையாக தொழுகையில் ஓதி முடித்தமைக்காக மலர்க் கொத்து வழங்கி பாராட்டப்பட்டார்.
அடமங்குடி அப்துல் ரஹ்மான் நபிபுகழ் பாடினார்.
ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியினை மக்கள் தொடர்பு செயலாளர் தொகுத்து வழங்கினார்.
சொற்பொழிவுக்குப் பிறகு தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications