ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்காக இலவச தங்கும் விடுதி திறப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் திருவாவடுதுறை மடம் சார்பில் பக்தர்களுக்காக இலவச தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோவில் ராமேஸ்வரத்தில் உள்ளது. ராமநாதசுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்காக திருவாவடுதுறை மடத்துக்கு சொந்தமான இடத்தில் இலவச தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது.
இலவச விடுதியை திறந்து வைத்து திருவாவடுதுறை ஆதீனம் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் பேசியதாவது,
ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக, திருவாவடுதுறை மடத்துக்கு சொந்தமான இடத்தில் இலவச தங்கும் விடுதி ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் உள்ள ஹாலில் 60 பக்தர்கள் 3 நாட்கள் வரை தங்கலாம்.
முன்கூட்டியே பதிவு செய்ய முடியாது. நேரில் வந்து பெயர், விலாசம் தெரிவிக்க வேண்டும். உணவு இலவசம். இந்த விடுதியில் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கும். ராமநாதபுரம், உத்தரகோசமங்கையிலும் பக்தர்களுக்காக இலவச தங்கும் விடுதிகள் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications