நானோ மருத்துவத்தால் எதிர்காலத்தில் எய்ட்சை குணப்படுத்தலாம்: சிவதாணு பிள்ளை
நெல்லை: எய்ட்ஸ், கேன்சர் உள்பட தீராத நோய்களை முற்றிலும் குணப்படுத்த நானோ தொழில்நுட்ப முறையில் மருநதுகள் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது என விஞ்ஞானி சிவதாணு பேசினார்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகமும், நெல்லை மருத்துவ கல்லூரியிலுள்ள தோல் நோய் துறையும் இணைந்து நானோ மருத்துவத்தில் தொடர் மருத்துவ கல்வி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தின.
தோல் நோய் பிரிவு தலைவர் டாக்டர் நிர்மலா தேவி வரவேற்றார். மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரன் குத்துவிளக்கேற்றி வைத்தார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிம்லா பாலசந்திரன் பேசினார்.
கருத்தரங்களில் தலைமை வகித்த இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முதன்மை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பேசியதாவது, நானோ தொழில்நுட்பம் என்பது மிகவும் நுண்ணியது எனப் பொருள்படும். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நானோ தொழில் நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
இதன்மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளால் நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியும். நானோ தொழில்நுட்பம மருத்துவம மட்டுமல்லாமல் ஏவுகணை மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் டெலிசர்ஜரி செய்யப்படுகிறது.
டெலிசர்ஜரி என்பது அமெரிக்காவி்ல் உள்ள டாக்டர் இந்திய மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு சிகி்ச்சை அளிப்பார். அது மட்டுமின்றி நோயை எளிதில் கண்டறித்து அதற்குரிய மருத்துகளை அழிப்பார். புற்றுநோய்க்கும் நவீன மருந்துகள் இம்முறையில் வழங்கப்படுகின்றன. புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை நாளடைவில் அழித்துவிடும்.
எய்ட்ஸ், கேன்சர் மற்றும் மலேரியா காய்ச்சல் உள்பட பல்வேறு தீராத நோய்களை முற்றிலும் குணப்படுத்தும் விதத்தில் மருந்துகள் தயாரிக்க ஆராய்ச்சி நடந்து வருகிறது. விரைவில் இந்த நோய்களுக்கான மருந்துகள் கிடைத்துவிடும். எதிர்காலத்தில் நானோ தொழில்நுட்பம் மருத்துவ துறையில் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.
இவ்வாறு சிவதாணு பிள்ளை பேசினார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications