பேராசிரியர் பொற்கோ 70ம் ஆண்டு நிறைவு விழா
தமிழறிஞராகவும் மொழியியல் அறிஞராகவும் உலக அளவில் மதிக்கப்படும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் பொற்கோ அவர்களின் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா சென்னை, அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் 11.06.2011 காரி(சனி)க் கிழமை காலை 10 மணி முதல் மாலை எட்டுமணி வரை நடைபெற உள்ளது.
தொடக்க விழாவினைத் தொடர்ந்து மூன்று அமர்வுகளில் பேராசிரியர் பொற்கோ அவர்களின் படைப்பு, ஆய்வுப்பணிகள் குறித்து அறிஞர்கள் ஆய்வுரைகள் வழங்க உள்ளனர். மாலையில் வாழ்த்துரையுடன் கூடிய பாராட்டு விழாவில் “ஆய்வுலகில் பொற்கோவின் பாதையும் பயணமும்", “தமிழக வரலாற்றில் விளக்கும் வெளிச்சமும்" ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட உள்ளன.
மேலும் கண்ணியம் இதழின் சிறப்பு வெளியீடாகப் “பேராசிரியர் பொற்கோவின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாச் சிறப்பு மலரும்" வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தின் அறிஞர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்த விழாவுக்குத் தமிழார்வலர்கள்,ஆய்வாளர்களை விழாக்குழுவினர் அழைத்து மகிழ்கின்றனர்.
நன்றி: http://muelangovan.blogspot.com


Click it and Unblock the Notifications
