உறவில் தனிமை, இது மிக மிக கொடுமை...!

குறிப்பாக நல்லதொரு உறவில் ஈடுபட்டிருக்கும்போது சிலருக்கு திடீரென தாங்கள் தனிமையில் விடப்பட்டது போன்ற உணர்வு எழும். இது அவர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி, வருத்தத்தில் மூழ்கடித்து, எப்போதும் ஒரு விதமான இறுக்கமான மன நிலைக்குக் கொண்டு போய் விடுகிறதாம். ஆனால் உறவில் ஏற்பட்டிருக்கும்போதும் கூட தனிமையும், இப்படிப்பட்ட கவலைகளும் வருவது சகஜம்தான் என்று கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். இதை சரி செய்வதும் சுலபம் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
ஏன் இப்படி உறவில் ஈடுபட்டிருக்கும்போது கூட தனிமை உணர்வு வாட்டுகிறது?.. காரணங்களைப் பார்ப்போம்.
நட்பைத் தாண்டும்போது - ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நட்புதான் முதலில் தோன்றும். இந்த நட்பு ஒரு புள்ளியில் உறவாக மாறுகிறது. அப்படி மாறும்போது அந்த பழைய நட்பு மறைந்து போய் விடும். உறவுக்குள் புகுந்து கொண்ட பின்னர் இருவருக்கும் இடையிலான அன்னியோன்யமே மேலோங்கியிருக்கும் என்பதால் இருவரும் நட்பாக பழகுவது இயலாததாக மாறி விடுகிறதாம்.
நண்பர்களாக இருந்தபோது மிக எளிதாக, எதையும் பேசிக் கொள்ள முடிந்த இவர்களால், உறவுக்குள் புகுந்த பின்னர் அப்படிப் பேசிக் கொள்ள முடியாமல் போவதும் இந்த தனிமை உணர்வுக்குக் காரணமாக அமையுமாம்.
தகவல் தொடர்பில் சிக்கல் - அதேபோல இருவரில் யாருக்காவது ஒருவருக்கு ஈகோ பிரச்சினை வந்தால் கூட போதும், தீப்பொறி கிளம்பி தள்ளி வைத்து விடுமாம். நான் என்ன பேசுவது, அவனே பேசட்டும் என்று பெண்ணும், நானேதான் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா, அவள்தான் பேசட்டுமே என்று ஆணும் ஈகோ பார்க்க ஆரம்பித்தாலும் இருவருக்கும் இடையே சின்னதாக இடைவெளி விழுந்து விடுமாம்.
தூரம் - இருவருக்கும் இடையிலான தூரமும் கூட ஒரு விதமான இளக்கத்தை ஏற்படுத்துமாம். இருவரும் ஆளுக்கொரு ஊரில் இருந்தாலும் கூட மன ரீதியாக இருவரும் இணைந்தே இருப்பதாக அவர்களுக்குள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் சட்டென்று பார்க்க முடியாத தூரத்தில் இருக்கும் வரை உறவுகளில் எப்போதும் தனிமை உணர்வும் கூடவே இருக்குமாம்.
கவனத்தை திருப்புங்கள் - உங்களது துணை உங்களிடம் பேச முடியாத நிலை சில நேரங்களில் ஏற்படலாம். சில இக்கட்டான சூழல்கள் அவரை தற்காலிகமாக உங்களிடமிருந்து துண்டித்து வைக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் மனதை அலை பாய விடாமல் தடுக்க, வேறு சில வேலைகளில், பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்தலாம்.
இருப்பினும் நீதான் என் தேவதை என்று ஒரு ஆண் முடிவு செய்து விட்டால் நி்ச்சயம் அவனை மாற்ற முடியாது. அதேபோல ஒரு பெண்ணும் தனது 'நண்பன்' குறித்த முடிவுக்கு வந்து விட்டால் அவளாளும் மாற்ற முடியாது. எனவே இப்படிப்பட்டவர்களை இதுபோன்ற பிரிவுகள் தற்காலிகமாக முடக்கிப் போடுமே தவிர நிரந்தரமாக பிரித்து விட முடியாது என்பது உளவியாளர்களின் கூற்றாக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications