ஏரல் சேர்மன் கோவில் தை அமாவாசை விழா
ஏரல்: ஏரல் சேர்மன் கோவிலில் இன்று தை அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் பிரசித்த பெற்ற சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தை அமாவாசை விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வந்தார்.
முக்கிய விழாவான அமாவாசை திருவிழா இன்று (22ம் தேதி) நடைபெற்றது. இதையொட்டி மதியம் 1.30 மணிக்கு சுவாமிக்கு உருகு பலகை தரிசன அபிஷேகம், மாலை 4 மணிக்கு விலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மன் திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு 1ம் கால கற்பக பொன்சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடந்தது.
23ம் தேதி அதிகாலை 5 மணிக்கு 2ம் கால வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1.30 மணிக்கு 3ம் கால பச்சை சாத்தி அபிஷேகம், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோவில் வந்து சேரும் ஆனந்த காட்சி ஆகியவை நடக்கின்றன.
நிறைவு விழாவான 24ம் தேதி காலை தாமிரபரணியில் சுவாமி நீராடல் நிகழ்ச்சி, பகல் 12.30க்கு அன்னதானம், இரவு சுவாமி ஆழிலை சயனம் மங்கலம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏரலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications