துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடந்த ரத்ததான முகாம்: ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஏற்பாடு
துபாய்: துபாயில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு இந்திய சுதந்திர தினம் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாள் உள்ளிட்டவற்றையொட்டி சிறப்பு ரத்ததான முகாமினை 16.08.2013 அன்று காலை அல் கரூத் பகுதியில் அமைந்துள்ள கிண்டர்கார்டன் ஸ்டார்டர்ஸ் பள்ளியில் நடத்தியது. இம்முகாம் இந்திய கன்சுலேட் மற்றும் இந்திய சமூக நல அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா பங்கேற்று தானும் ரத்ததானம் செய்து முகாமினை துவக்கி வைத்தார். அவர் தனது உரையில், ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம், கை கழுவுவதன் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக துபாய் லத்திஃபா மருத்துவமனை ரத்ததான வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜைனப் ஹைதர் பங்கேற்றார். அவர் தொடர்ந்து ரத்ததான முகாம் மூலம் ரத்தவங்கிக்கு ரத்தத்தை சேகரித்து வழங்கி வரும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்திய சமூக நல அமைப்பின் (Indian Community Welfare Committee - ICWC) கன்வீனர் கே. குமார் தனது உரையில் உயிர் காக்கும் உன்னதானம் ரத்ததானம். இப்பணியினை தொடர்ந்து மெற்கொண்டு வரும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு எல்லாவித ஒத்துழைப்பும் நல்கப்படும் என்றார்.

ஜைனப் ஹைதர், கிண்டர்கார்டன் ஸ்டார்டர்ஸ் பள்ளியின் முதல்வர் ஆஷா அலெக்ஸாண்டர் மற்றும் அணுசரனையாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ரத்ததான முகாமில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்றோருக்கு சான்றிதழும், நினைவுப் பரிசும், பழரசம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான அணுசரனையினை ஃபியூச்சர் விஷன், கோட்டூர் இன்டீரியர்ஸ் அன்ட் பர்னிச்சர், டிஜிட்டல் ஐ ஸ்டுடியோ, 105.4 ரேடியோ ஸ்பைஸ் ஆகியவை வழங்கின.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications