For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டேட்டிங் போனால் நம்மையும் செலவழிக்கச் சொல்வார்களோ?: பெண்கள் கவலை

By Siva
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: டேட்டிங் செல்கையில் எங்கே தன்னையும் பில் பணத்தை கட்டச் சொல்வார்களோ என்று 44 சதவீத பெண்கள் கவலைப்படுகிறார்களாம்.

கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேனட் லீவர், வெல்லெஸ்லீ கல்லூரியின் ரோசன்னா ஹெர்ட்ஸ், டேவிட் பிரெடரிக் ஆகியோர் ஒரு ஆய்வு நடத்தினர். டேட்டிங் செல்கையில் யார் செலவு செய்வது என்ற கவலை குறித்து தான் இந்த ஆய்வு.

டேட்டிங் செல்கையில் ஆண்களே அனைத்து செலவையும் செய்ய வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் பெண்களும் சில செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆண்கள் தான்

ஆண்கள் தான்

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 84 சதவீத ஆண்களும், 39 சதவீத பெண்களும் கூறுகையில், பல காலம் டேட்டிங் செய்தும் ஆண்கள் தான் பெரும்பாலானவற்றுக்கு செலவு செய்கின்றனர் என்றனர்.

நம்ம செலவழிக்க விட்டுவிடுவாங்களோ?

நம்ம செலவழிக்க விட்டுவிடுவாங்களோ?

57 சதவீத பெண்கள் டேட்டிங் செல்கையில் செலவு செய்ய முன்வருகிறார்கள். ஆனால் 39 சதவீத பெண்கள் தாங்கள் செலவழிக்க முன்வந்தால் அதை ஆண்கள் ஏற்கமாட்டார்கள் என்று நம்புகிறார்கள். இந்நிலையில் 44 சதவீத பெண்களோ எங்கே ஆண்கள் தாங்களும் செலவு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்களோ என்று கவலைப்படுகிறார்களாம்.

பெண்களும் செலவு செய்ய வேண்டும்

பெண்களும் செலவு செய்ய வேண்டும்

டேட்டிங் செல்லும்போது பெண்களும் செலவுகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று 64 சதவீத ஆண்கள் எதிர்பார்க்கிறார்களாம். அதேசமயம் பெண்கள் செலவழித்தால் அதை ஏற்க ஒரு மாதிரியாக இருக்கிறது என்று 76 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர்.

செலவழிக்கவில்லை என்றால்...

செலவழிக்கவில்லை என்றால்...

பெண்கள் ஒருபோதும் செலவழிக்கவில்லை என்றால் அவர்களை டேட் செய்வதை நிறுத்திவிடுவோம் என்று 44 சதவீத ஆண்கள் தெரிவித்தனர்.

English summary
According to a new study, 44% of women are worried when men expect them to share the expenses for their dates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X