For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவிக்கு அடிமையாகும் குட்டீஸ்களால் அதிகரிக்கும் வன்முறை… ஆய்வில் அதிர்ச்சி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஓடி விளையாடி குழந்தைகள் இன்றைக்கு டிவிக்கு அடிமையாகிக்கிடக்கின்றனர். அதிகம் டிவி பார்க்கும் குழந்தைகளினால் வன்முறை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதிகபடியாக டிவி பார்க்கும் பழக்கமே, சமூக குற்றங்களை அதிகரிக்கவும், இளம் குற்றவாளிகளை உருவாவதற்கும் காரணமாக அமைகிறது.

படிப்பில் மந்த நிலை ஏற்படுவதற்கும் டிவிதான் காரணம் என்று நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. டிவி முன்பு குழந்தைகளை விட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்தும் பெற்றோர்களே இதனால் என்னென்ன பாதிப்பு என்று மேற்கொண்டு படியுங்களேன்.

சீரியல்களில் மூழ்கும் பெண்கள்

சீரியல்களில் மூழ்கும் பெண்கள்

இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் சீரியலே கதி என்று கிடந்து மனஅழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

வன்முறைக் காட்சிகள்

வன்முறைக் காட்சிகள்

சீரியல்களில் குடும்ப பிரச்சினை என்றால் இளைஞர்கள் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகளில் அதிக அளவு வன்முறை காட்சிகள்தான் இடம்பெறுகின்றன. இதுபோன்ற டிவி நிகழ்ச்சிகள் குழந்தைகளிடம் இது பயங்கரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆயிரம் குழந்தைகளிடம் ஆய்வு

ஆயிரம் குழந்தைகளிடம் ஆய்வு

நியூசிலாந்தில் ஓடாகோ பல்கலையில் 5 முதல் 15 வயது வரையிலான 1000 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டு வந்தது. அவர்கள் அனைவரும் 26 வயதுடையவரைப் போன்று செயல்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிவிக்கு அடிமை

டிவிக்கு அடிமை

குழந்தை பருவத்தில் டிவிக்கு அடிமையானவர்களுக்கும், சமூக குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் மனத்தில் ஆழமாக பதிவதால், தானும் அவ்வித செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது.

புத்திக்கூர்மை பாதிக்கும்

புத்திக்கூர்மை பாதிக்கும்

அளவுக்கு அதிகமாக டிவியை பார்பவர்களின் மனநிலை, நடவடிக்கைகள் வித்தியசமாக இருக்கின்றன. குறிப்பாக புத்திகூர்மை, சமூக பார்வை மற்றும் பெற்றோருக்கு கட்டுப்படுதல் உள்ளிட்டவைகள் எதிர்மறையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

இளம்குற்றவாளிகள் அதிகரிப்பு

இளம்குற்றவாளிகள் அதிகரிப்பு

அதிகபடியாக டிவி பார்க்கும் பழக்கமே, சமூக குற்றங்களை அதிகரிக்கவும், இளம் குற்றவாளிகளை உருவாவதற்கும் காரணமாக அமைகிறது. எனவே டிவி பார்க்கும் பழக்கத்தை குறைத்தாலே சமூக குற்றங்கள் பாதி குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது.

ஒழுக்கம் குறைகிறது

ஒழுக்கம் குறைகிறது

அதிக உணர்ச்சி வசப்பட வைப்பது, காழ்ப்பு உணர்ச்சி போன்ற பழக்கங்கள் டிவி மூலமாகவே குழந்தைகள் கற்றுக்கொள்வதாக ஆய்வு தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களால் கீழ்படிதல் இல்லாமை, கல்வி தரம் குறைவது, சமூக ஒழுக்கம் பாதிப்பு உள்ளிட்ட விளைவுகள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மணிநேரம் போதும்

2 மணிநேரம் போதும்

குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் 2 மணி நேரம் டிவி பார்ப்பதே உகந்தது என அமெரிக்க கழகத்திற்கு குழந்தைநல மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர்.

English summary
Children who watch excessive amounts of television are more likely to have criminal convictions and show aggressive personality traits as adults, a New Zealand study has found.The University of Otago study tracked the viewing habits of about 1,000 children born in the early 1970s from when they were aged five to 15, then followed up when the subjects were 26 years old to assess potential impacts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X