மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா .. ஏப். 14ம் தேதி தொடக்கம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமி சன்னதியில் காலை 10.46 மணி முதல் 11 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்படுகிறது. அங்கு சுந்தரேஸ்வரர் சுவாமியும், மீனாட்சி அம்மனும் எழுந்தருள சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுவாமியும், அம்மனும் தினமும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி, 4 மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இதற்காக மாசிவீதிகளில் உள்ள கடைக்காரர்கள் வாகனத்தை தட்டாதவாறு பந்தல் அமைக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுள்ளது.

21ம் தேதி பட்டாபிஷேகம்
முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி பட்டாபிஷேகம் 21-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அம்மன் சன்னதியில் இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சிக்கு பட்டம் சூட்டி, செங்கோல் வழங்கப்படுகிறது.

23ம் தேதி திருக்கல்யாணம்
22-ந் தேதி மாசி வீதிகளில் திக்குவிஜயம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 23-ந் தேதி வடக்கு-மேற்கு ஆடி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கிறது. திருக்கல்யாணம் காலை 8.17 மணி முதல் 8.41 மணிக்குள் நடக்கிறது. திருமணம் முடிந்து சுவாமியும், அம்மன் பழைய திருக்கல்யாண மண்படத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

24ம் தேதி தேரோட்டம்
பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் ஆடி வீதிகளில் ரூ.10 லட்சம் செலவில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. மேலும் கோடை வெயிலை சமாளிக்க திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியில் குளு, குளு வசதியும் செய்யப்பட உள்ளது. 24-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.

25ம் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார்
மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 25-ந் தேதி காலையில் நடக்கிறது. இதற்காக அழகர்கோவிலில் இருந்து 23-ந் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள், கள்ளர் வேடத்தில் மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு
சித்திரைத் திருவிழாவையொட்டி கோவிலிலும், வைகை ஆற்றுப் பாலப் பகுதிகளிலும், நகரிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications