கத்தார் காயிதே மில்லத் பேரவை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
கத்தார்: கத்தார் காயிதே மில்லத் பேரவையின் இஃப்தார் நிகழ்ச்சி 25-07-2013 அன்று பேரவையின் தலைவர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் அவர்கள் இல்லத்தில் வைத்து சிறப்பாக நடந்தது.
அல் ஹாபிழ் முஹம்மது லெப்பை பாகவி அவர்கள் இறைமறையை இனிது ஓதி துவக்கி வைத்த இந்த இனிய
நிகழ்வின் தலைமைப் பொறுப்பை துணைத்தலைவர் சிக்கந்தர் அவர்கள் ஏற்க, செயலாளர் கடலூர் முஸ்தபா அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத் தலைவரின் வரவேற்புரைக்குப் பின் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் அறிமுக உரை ஆற்றினார்.
காயிதே மில்லத் பேரவையின் நோக்கம், பேரவை ஆற்றவிருக்கும் சமூக அரசியல் பணிகளைக் குறித்து விவரித்த கவிமகன், ஒப்பற்ற நமது தலைவர்களின் தியாகத்தை விளக்கி, அவர்களது வழிகாட்டுதலின் பேரில் சமுதாயப் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செய்திட, இறையருளால் பேரவை எந்நேரமும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய தலைவர் ஹபீப் முஹம்மத், சப்தமின்றி சமுதாயப் பனி ஆற்றி வரும் தாய்ச் சபையின் தலைவர்கள், தொண்டர்களுக்காக துஆ செய்து பேரவையின் எதிர்காலத் திட்டங்களை எடுத்துரைத்தார். இயக்கத்திற்காகவும், சமுதாய வளர்ச்சிக்காகவும் சர்வபரி தியாகங்களை ஏற்றெடுக்க சித்தமாக இருப்பதாக சூளுரைத்தார். இந்த ஆண்டின் இறுதியில், தலைவர்களை அழைத்து கத்தாரில் மாபெரும் கூட்டம் ஒன்றை
இறையருளால் நடத்திட வேண்டும் என்ற தனது ஆவலையும், அதற்கான திட்டத்தையும் பதிவு செய்தார்.
திருச்சி சுஹைல் அவர்கள் நன்றியுரை நவில, துஆ பிரார்த்தனைக்குப் பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது. வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் தலைவர் ஹபீப் முஹம்மத் அவர்களால் தயாரிக்கப்பட்ட காயல் கஞ்சி மற்றும் பல்வேறு பதார்த்தங்கள் வழங்கப்பட்டு அனைவரும் மன நிறைவுடன் நோன்பு திறந்தனர்.
சுமார் 35 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, செயல்வீரர் கடலூர் முஸ்தபா அவர்கள் தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications