ஸ்ரீ ராம நவமி: ராமர் ஆலயங்களில் உற்சாகக் கொண்டாட்டம்
சென்னை: ராமன் அவதரித்த தினமான ஸ்ரீ ராம நவமி இந்தியா முழுவதும் உள்ள ராமர் ஆலயங்களில் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
பங்குனி மாதம் புனர் பூச நட்சத்திரத்தில், கிருஷ்ண பட்ச நவமி திதியில்தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளையே ராமநவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். ராம நவமி இந்தியா முழுவதும் விழா போல கொண்டாடப்படுகிறது.
மக்களைக் காக்க இறைவனே மனிதராக அவதாரம் எடுத்தார் அவர்தான் ராமர் என்கின்றன புராணங்கள். ஏக பத்தினி விரதனாகவும், மனைவியை கவர்ந்த அரக்கனை அழித்தார் என்றும் இந்தியாவின் இதிகாசத்தில் ஒன்றான ராமாயணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அவதார நாயகன் அவதரித்த நாளையே ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டுதோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்துநாட்களை முன்பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்துநாட்களைப் பின்பத்து எனவும் இருபது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நாட்களில் ராமர் ஆலயங்களில் பஜனைகள், இராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு நீர்மோர், பானகம்,சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.
ராமனின் நினைவாக...
பானகம் , நீர்மோர் போன்றவை ஸ்ரீ ராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்தபோதும், கானகவாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர்மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவையிரண்டும் ஸ்ரீராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ராமர் பட்டாபிஷேகம்
வீடுகளில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜைசெய்து, பருப்பு, வடை, நீர்மோர், பானகம், பாயசம் நிவேதனம்செய்து வழிபட்டனர்.
ராம நாமம் நேர்த்திக்கடன்
ராமநாமத்தின் மகிமை பகவானின் 1000 நாமங்களுக்கு இணையானது ராமநாமம். ஸ்ரீராம நவமியன்று ராம நாமம் சொல்வதும், ராம நாமம் எழுதுவதும் நற்பலனை தரும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ராமநாமம் எழுதினர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கோதண்டராமர் ஆலயத்தில் ராமநவமி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் தாங்கள் எழுதி வந்திருந்த ராம நாம பிரார்த்தனை புத்தகத்தை இறைவனின் பாதங்களில் வைத்து வணங்கினார்கள். அதேபோல் ஆழ்வார் பேட்டை ஆஞ்சநேயர் ஆலயத்திலும் ராமநவமி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
கும்பகோணம் ராம நவமி
தென்னக அயோத்தி என்று போற்றப்படும் கும்பகோணம் ராமசுவாமி திருக்கோவில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ராமர், சீதாதேவி பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சி அளிப்பதால் தென்னக அயோத்தி என்றழைக்கப்படுகிறது. இங்கு 64-க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுற அமைந்துள்ளன.
இக்கோவிலில் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் ராமநவமி விழா தொடங்கியது. 17-ந் தேதி மாலை சூர்ணாபிஷேகம் ,18-ந் தேதி காலை வெண்ணைத்தாழி நடைபெற்றது. ராமநவமி தினமான இன்று காலை 7.30 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இன்று இரவு 8மணிக்கு தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications