For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆணும், பெண்ணும் ஏன் கட்டி அணைச்சுக்கிறாங்கன்னு தெரியுமா...?

Google Oneindia Tamil News

காதல் வயப்பட்டவர்களும், காமம் வயப்பட்டவர்களும் நேரில் சந்திக்கும்போது செய்யும் முதல் செயல் - கட்டி அணைப்பது, தழுவிக் கொள்வது, முத்தமிட்டுக் கொள்வதுதான். ஆனால் இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள் என்று என்றாவது யோசித்திருப்பீர்களா... ஆனால் இதற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி வந்து விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நமது தோலில் உள்ள உணர்வு செல்கள் மூலமாகத்தான் இந்த தழுவல் நிகழ்ச்சி தூண்டப்பட்டு நடப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாம். இந்த உணர்வு செல்கள்தான் ஒருவரை கட்டி அணைக்குமாறு தூண்டுவிக்கிறதாம்.

மனிதர்கள் முதல் பூனை வரை அத்தனை மனிதர்கள், விலங்குகளுக்கும் இது ஒரே மாதிரியான நிகழ்வாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அபாரமான உணர்வுப் பகுதி

அபாரமான உணர்வுப் பகுதி

நமது உடலிலேயே மிகவும் அபாரமான முறையில் உணர்வுகள் தூண்டப்படுவது தோலில்தான். மேலும் அதுதான் நமது உடலின் மிகப் பெரிய உணர்வு பகுதியும் ஆகும்.

இது ஓ.கே... இது நாட் ஓ.கே..

இது ஓ.கே... இது நாட் ஓ.கே..

நமது தோலுக்கு எது சந்தோஷ உணர்வு, எது துக்க உணர்வு என்று பிரித்துப் பார்க்கத் தெரியுமாம். அதன் அடிப்படையில்தான் அது உணர்வுத் தூண்டலை மேற்கொள்கிறதாம்.

இது காதலா... அல்லது காமமா?

இது காதலா... அல்லது காமமா?

ஆணும், பெண்ணும் கட்டி அணைப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தாயும், மகனும் தழுவிக் கொள்வது பாசத்தின் பிரதிபலிப்பு. அதுவே கணவன் மனைவியாக இருந்தால் வேறு உணர்வு, காமம் கலந்திருக்கும். காதலன், காதலிக்கும் அதுவேதான். இதையெல்லாம் நமது தோலில் உள்ள உணர்வு செல்கள் சரிவர பகுத்தாய்ந்து அதற்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துகிறதாம்.

தீ சுட்டா...?

தீ சுட்டா...?

அதேபோல கொதிக்கும் காபி கொட்டினாலோ அல்லது தீயில் கை பட்டு விட்டாலோ கூட அதற்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துகிறதாம் தோலில் உள்ள உணர்வு செல்கள்.

மூளைக்கு இதில் தொடர்பில்லையாம்

மூளைக்கு இதில் தொடர்பில்லையாம்

இதெல்லாம் ரொம்பப் புதிய விஷயமில்லைதான். ஆனால் இந்த எல்லா உணர்வுகளும் முதலில் மூளைக்குப் போய் பிறகுதான் நமது உணர்வுகளைத் தூண்டுவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றம் இப்போது.

நமக்கு நாமே...

நமக்கு நாமே...

பெரும்பாலான உணர்வுத் தூண்டல்களை தோல் அளவிலேயே முடித்துக் கொள்கின்றனவாம் இந்த உணர்வு செல்கள். அதாவது பல உணர்வுத் தூண்டல்கள் மூளைக்குப் போவதில்லையாம். சிலவற்றை மட்டுமே மூளைக்கு அனுப்புகின்றனவாம் நியூரான்கள். பெரும்பாலானவை தன்னிச்சையாகவே நடைபெறுகிறதாம்.

இந்த ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லையாம். முடிந்ததும் முழுமையான ரிசல்ட் வெளியாகுமாம்.

English summary
Scientists believe they are a step closer to understanding why we like a gentle touch. A new study claims to have isolated the specific class of sensory cells in the skin that respond to a gentle caress. Social animals, from humans to cats, all seem to enjoy being stroked, but until now the neuronal circuitry underlying the sensation had been a mystery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X