Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில மகளுக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடைத்திருநாள்

Subscribe to Oneindia Tamil

ஆதிகாலம் முதலே விவசாயிகள் அறுவடை விழா கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு காவல் தேவதை இருப்பதாகவும் அதனிடம் வேண்டுதல் செய்தால் அறுவடை அதிகரிக்கும் என்றும் நம்பினார்கள். இதனடிப்படையில் தான் ஆதியில் அறுவடை விழாக்கள் இயற்கையைப் பாதுகாக்கும் தெய்வங்களுக்கு ஆனந்தமளிப்பதற்காக நடத்தப்பட்டன.

நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகைதான் அறுவடைத்திருநாள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாக கொண்டாடி மகிழ்வதைப்போல உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில் நன்றி கூறும் திருநாளாக, ஜப்பானில் புதிய சுவை திருநாளாக, சீனாவில் "சங் செய்' என்ற பெயரில் இப்படி பல்வேறு பெயர்களில் அறுவடைத் திருநாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. , ரோம, எகிப்திய, எபிரேயக் கலாச்சாரங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழா கொண்டாடியிருக்கின்றன.

50 நாடுகளில் அறுவடைத்திருநாள்

50 நாடுகளில் அறுவடைத்திருநாள்

சங்ககாலமான கி.மு இருநூறுக்கும் கி.பி முன்னூறுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடியதாக நம்பப்படுகிறது. தமிழர்களின் கலாச்சார அடையாளமாய் நிமிர்ந்து நிற்கும் பொங்கல் விழா, தமிழகம், இலங்கை போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள சுமார் ஐம்பது நாடுகளில் கொண்டாடுகிறார்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதன் மூலம் தங்கள் இன, சமூக, கலாச்சார, வாழ்வியல் அடையாளங்கள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இந்தியா முழுவதும் அறுவடைத் திருநாள்

இந்தியா முழுவதும் அறுவடைத் திருநாள்

தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும் அதே நாளில் இந்தியா முழுவதும் அறுவடை விழா பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் லகோரி என்றும், அஸ்ஸாமில் போகாலி பிகு என்றும், உத்தர பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் மகர் சங்கராந்தி என்றும், ஆந்திராவில் போகி என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அரிசி விளைச்சலுக்கு நன்றி

அரிசி விளைச்சலுக்கு நன்றி

மலேசியாவில் ஜூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் போல அங்கும் அரிசி விளைச்சலுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்காவில் இயற்கைக்கு நன்றி

அமெரிக்காவில் இயற்கைக்கு நன்றி

அமெரிக்காவில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா விளைச்சலுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை நன்றி செலுத்தும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மக்கள் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். அமெரிக்கா வழி செல்லும் கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இறைவனுக்கு படைப்பு

இறைவனுக்கு படைப்பு

ரோமர்கள் தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக சோளப் பயிரின் பெண் தெய்வமான சீரஸ் என்பவருக்கு நன்றி செலுத்தும் விழா வாக கொண்டாடுகின்றனர். அக்டோபர் நான்காம் நாள் செரிலியா என்ற பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தங்கள் தெய்வத்துக்கு புதிய காய்கறிகள், பழங்கள் , பன்றி போன்றவற்றைப் படைத்து, இசை, விளையாட்டு, நடனம் என விழாவை கொண்டாடுகிறார்கள்.

எகிப்தியர்கள் கொண்டாட்டம்

எகிப்தியர்கள் கொண்டாட்டம்

எகிப்தியர்கள் விளைச்சல் விழாவில் காய்கறிகள் மற்றும் வளம் தரும் கடவுளான மின் வழிபாடு பெறுகிறார். இசை, நடனம் என கோலாகலப் படுகிறது எகிப்தியர்களின் இந்த அறுவடை விழா.

ஆனந்த திருவிழா

ஆனந்த திருவிழா

வியட்நாமில் பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்தமாய் ஒன்றித்திருக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. தெட் திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் பதினைந்தாம் நாளில் அங்கு அறுவடைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

கொரியாவில் நன்றி விழா

கொரியாவில் நன்றி விழா

கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.

ஆர்பாட்டமான அறுவடை விழா

ஆர்பாட்டமான அறுவடை விழா

ஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோ ரி-னோ-இச்சி என்னும் பெயரில் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். இரவு முழுதும் ஆட்டம் பாட்டமாய் இந்த விழா குதூகலமூட்டுகிறது

3000 ஆண்டுகள் கொண்டாட்டம்

3000 ஆண்டுகள் கொண்டாட்டம்

இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாள் சுக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இன்று கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது.

முன்னோர்களை நினைவு கூறும் விழா

முன்னோர்களை நினைவு கூறும் விழா

ஆப்பிரிக்காவில் யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கு, இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது.

ஆஸ்திரேலியால் நான்கு விழா

ஆஸ்திரேலியால் நான்கு விழா

ஆஸ்திரேலியாவிலும் ஏப்ரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர் - ஜனவரி காலத்தில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுவது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது.

ஜெர்மனியில் கொண்டாட்டம்

ஜெர்மனியில் கொண்டாட்டம்

ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோபர்விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. வண்ண மயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

இறைவனுக்கு படைக்கும் விழா

இறைவனுக்கு படைக்கும் விழா

இங்கிலாந்தில் அறுவடைவீடு என்னும் பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவில் பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும், நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது.

சீனாவில் கேக் பறிமாற்றம்

சீனாவில் கேக் பறிமாற்றம்

சீனாவில் மக்கள் ஆகஸ்ட் நிலா விழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய உணவான மூன்கேக்குகளை மக்கள் பகிர்ந்து, பரிசளித்து மகிழ்கிறார்கள்.

இயற்கையோடு தொடர்பு

இயற்கையோடு தொடர்பு

உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள் இயற்கைக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றன. மனிதனோடும் இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+