நினைவுகள் சுகமானவை….

சந்தித்த நொடிப்பொழுதில் சட்டென்று வந்து ஒட்டிக்கொள்வதுதான் காதல். விழியில் விழுந்து இதயம் நுழைந்தது காதல் என்பார்கள். அந்த விழிகள் சந்திக்க ஏதோ ஒன்று காரணமாக இருந்திருக்க வேண்டுமே?.
நமக்குரியவர்களை நாம் சந்திக்க வேண்டும் அதற்கான நேரத்தை இயற்கைதான் ஏற்படுத்திக்கொடுக்கிறது. ஏதோ ஒரு மழைநாளில்... ஒரு பேருந்து நிறுத்தத்தில்... திருமண மண்டபத்தில் என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
நமக்குரியவரை நாம் சந்தித்த உடனே மனசுக்குள் மணியடிக்குள்... மூளைக்குள் பல்பு எரியும் என்றெல்லாம் சொல்வார்களே... ஏன் ஜெமினி மேம்பாலத்தில் கூட லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்குமாம்.
இந்த காதல் வந்தால் என்னென்னவோ நிகழ்கிறது.
கல்லாய் இருந்த நான்
சிற்பமாகிப்போனேன்...
அமாவாசையன்று கூட நிலவு தெரிந்தது
ஜன்னலில் உன் முகம்...
என்று பேச்சும் மூச்சும் கூட கவிதையாகிப் போகிறது.
சிலருக்கு இரண்டு பக்கமும் சிக்னல் ஓகேயாகிவிடும். சிலருக்கு ஒருபக்கம் மட்டுமே பச்சை சிக்னலும் ஒரு பக்கம் சிகப்பு சிக்னலும் விழுந்திருக்கும். அப்போது நினைவுகள் மட்டுமே சுகமென வாழ்ந்துவிடுவார்கள் சில காதலர்கள்.
காதல் வந்தால் சொல்லியனுப்பு...
உயிரோடிருந்தால் வருகிறேன்...
என்று காதலியை நினைத்து ஏங்குபவர்களும் இருக்கதான் செய்கின்றனர்.
இருவருமே காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் கைகூடாமல் போன காதல்களும் உள்ளது.
காதலிக்கும் போது பறிமாறிய கடிதங்கள்... பரிசுப்பொருட்கள்... பேச்சுக்கள்... சென்ற இடங்கள்... முத்தங்கள் என ஒவ்வொன்றும் நினைவுச்சின்னங்களாக நிறைந்திருக்கும்.
இன்றைக்கும் மெயில் ஐடியின் பாஸ்வேர்ட், குழந்தையின் பெயர் என ஏதாவது ஒன்றில் காதலி அல்லது காதலனின் பெயரை வைத்து அழகு பார்க்கும் காதலர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒரு மழைநாளில் நாம் சந்தித்தோம்...
ஒவ்வொரு முறை மழை வரும் போதும்
அதில் உன் முகம்தான் தெரிகிறது...
வடகிழக்குப் பருவமழையோ...
தென்மேற்குப் பருவமழையோ...
எதுவென்றாலும்
பெயர்தான் மாறுமே தவிர
மழையின் நிறம் மாறாது...
அதுபோலத்தான்
நம் காதலும்
நாம் இடம்மாறிப் போயிருக்கலாம்...
நம் நேசம் ஒன்றுதான்...
நம் நினைவுகளை விட்டு
நீங்காது நிறைந்திருக்கும்!
இதுதான் காதலின் சக்தி... இந்த நினைவுதான் பொக்கிஷங்களாய் ஒவ்வொரு காதலர்களுக்குள்ளும் நிறைந்திருக்கும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications