For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் நடைபெற்ற கர்நாடக இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற துபாய் தமிழ் மாணவி

சென்னையில் நடைபெற்ற கர்நாடக இசை நிகழ்ச்சியில் துபாய் தமிழ் மாணவி பங்கேற்றார்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெற்ற கர்நாடக இசை நிகழ்ச்சியில் துபாய் தமிழ் மாணவி குமாரி எஸ். சௌம்யலட்சுமி பங்கேற்றார்.

சென்னை நந்திகேஸ்வர் தாள வித்யாலயா மற்றும் சிஸ்யாஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் இளம் கர்நாடக இசைக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரங்கிசை என்ற முதலாவது இளைஞர் திருவிழா 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 9 மணி வரை சென்னை குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.

Dubai Tamil student participated in the Chennai Karnatic music program

இந்த விழாவுக்கு சென்னை குயின் மேரிஸ் கல்லூரி இசைத்துறையின் ஓய்வு பெற்ற தலைவர் டாக்டர் எம்.ஏ. பாகீரதி தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக SRDFVV பில்டிங் கமிட்டியின் தலைவர் லயன் ஸ்ரீ சி.ஆர். நரசிம்மன், SRSS சபாவின் தலைவர் ஸ்ரீ கே.எஸ். சௌம்யநாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் துபாயில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுக்களை பெற்ற தமிழ் மாணவி குமாரி எஸ். சௌம்யலட்சுமியின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் பகால ஜெயபிரகாஷ் வயலினும், கே.பி. அர்ஜுன் சுந்தரம் மிருதங்கமும், திருவாரூர் கே. வெங்கடேஷ் கடமும் வாசித்தனர்.

Dubai Tamil student participated in the Chennai Karnatic music program

தில்லைஸ்தானம் சகோதரிகளான திருமதி வர்தினி பரணீதரன் மற்றும் செல்வி வர்ஷினி சூரியநாராயணன் ஆகியோரும் கர்நாடக இசை நிகழ்ச்சியினை வழங்கினர்.

மேலும் இளம் இசைக்கலைஞர்கள் பலர் காலை முதல் மாலை வரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது இசைத் திறமையை வெளிப்படுத்த்தினர். இந்த விழாவில் இசைப் பிரியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

English summary
A Dubai Tamil student has participated in the Chennai Karnatic music program yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X