For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் குளோபல் வில்லேஜ்!

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக குளோபல் வில்லேஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 5ம் தேதி திறக்கப்பட்ட இந்த குளோபல் வில்லேஜ் மார்ச் மாதம் 1ம் தேதி வரை வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

1997 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு தற்போதுள்ள நிரந்தர இடத்தில் குளோபல் வில்லேஜ் செயல்பட்டு வருகிறது. தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட்டு வருகிறது. 65க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. 37 நாடுகளின் பெவிலியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியா, சவுதி அரேபியா, ஏமன், பாகிஸ்தான், சிரியா, லெபனான், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முக்கியமானமதாகும்.

இந்தியா பெவிலியனில் குஜராத்தை நினைவுபடுத்தும் வகையிலான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய சைக்கிள் ரிக்‌ஷா, போஸ்ட் ஆபிஸ் உள்ளிட்டவற்றை நினைவு கூறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

Global Village in Dubai

தினந்தோறும் பல்வேறு அரங்குகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் இந்தியா பெவிலியனில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் காண உலக பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் பெறும் வாய்ப்புகளும் உள்ளன.

English summary
Global Village which has been set up in Dubai has attracted a lot of tourists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X