துபாயில் நடந்த ஈமான் அமைப்பின் செயற்குழு கூட்டம்
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் 7.10.2014 அன்று மாலை அஸ்கான் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
துவக்கமாக ஜமாஅத் ஒருங்கிணைப்பு நிர்வாகி கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லா இறைவசனங்களை ஓதினார். கூட்டத்திற்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவரும், அரேபியா ஹோல்டிங்ஸ் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார்.

அவர் தனது தலைமையுரையில் ஈமான் அமைப்பின் செயல்பாடுகளுக்கு முக்கியக் காரணமாக இருந்து வரும் அனைத்து நிர்வாகிகளையும் பாராட்டினார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார்.

ஈமான் அமைப்பின் சார்பில் 31.10.2014 வெள்ளிக்கிழமை சோனாப்பூர் பவர் செக்யூரிட்டி கேம்பில் நடைபெற இருக்கும் ரத்ததான முகாம், எமிரேட்ஸ் என்விரான்மென்டல் சொசைட்டியின் பெப்ஸி உள்ளிட்ட அலுமினிய கேன் சேகரிப்பு பணியில் ஈடுபடுவது, அமீரக தேசிய தின விழாவினை சிறப்புற கொண்டாடுவது, இலவச மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக அல்ஹாஜ் இத்ரீஸ் மரைக்காயர் அவர்கள் பங்கேற்று ஈமான் அமைப்பின் சேவைகள் சிறப்புற வாழ்த்து தெரிவித்தார். மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்
காயல் ஈஸா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியில் விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், தகவல் தொடர்பு பொறுப்பாளர் கும்பகோணம் சாதிக், செயற்குழு உறுப்பினர்கள் யாகூப், ஈசா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications