For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி மறைவு.. தமிழ் மக்கள் அமெரிக்காவில் இரங்கல் கூட்டம்!

திமுகவின் தலைவர் கருணாநிதியின் புகழை நினைவு கூறும் வகையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் தமிழ் மக்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவில் கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல்-வீடியோ

    கலிபோர்னியா: திமுகவின் தலைவர் கருணாநிதியின் புகழை நினைவு கூறும் வகையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் தமிழ் மக்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி வயதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.

    People arranged mourning function for DMK leader Karunanidhi in California US

    கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்கள், மக்கள் இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் திமுக தலைவர் கருணாநிதியின் உருவ படம் திறந்து இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வளைகுடா பகுதி வாழ் தமிழ் மக்கள் சார்பில் கடந்த 8ம் தேதி இந்த கூட்டம் நடந்தது. அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவின் வார்ம்ஸ் ஸ்பிரிங்ஸ் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான குமார் நல்லுசாமி இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதன்பின் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தபட்டது. பின் கருணாநிதி படத்தினை திறந்து நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கோவிந்த் கோபால் நிகழ்ச்சியைய் தொகுத்து வழங்கினார் இறுதியாக திமுக தலைமை கழக பேச்சாளர் ஆலந்தூர் க.ஒப்பிலாமணி இரங்கல் உரை நிகழ்த்தினார். மேலும் பலர் கவிதைகள், கதைகள் மூலம் கருணாநிதியின் சிறப்பு குறித்து உரையாற்றினார்கள்.

    கேசவன் விஸ்வநாதன், ஆப்பகடை காளிதாஸ், நைஸ் நிலாமுதீன்,ஜெயா பாண்டே,டெய்சி ஜெயப்பிரகாஷ்,எழில்வாணன், பா ராஜேஷ், மருதுபாண்டி,சிவா பக்தவச்சலம் ஆகிய முக்கிய உறுப்பினர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.

    English summary
    People arranged mourning function for DMK leader Karunanidhi in California US.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X