துபாயில் நடைபெற்ற பாரதி கண்ட பாரதம் சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் பாரதி கண்ட பாரதம் எனும் சிறப்பு நிகழ்ச்சி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 131வது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் 20.12.2013 அன்று மாலை துபாய் இந்திய துணைத் தூதரக அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிங்கப்பூர் நாணய மாற்று சங்க தலைவர் மு. ஜஹாங்கீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பாரதியின் பெருமைகளை வியந்து போற்றியதுடன், பாரதிக்கு உள்ள தன்னம்பிக்கை குறித்து விவரித்தார். மேலும் அவர் கூறுகையில், பாரதியார் நபிகள் நாயகம் (ஸல்) இஸ்லாமியப் பிரச்சாரம் மேற்கொண்ட போது அவருக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்புகளையும் மீறி தன்னம்பிக்கை மனிதராக வலம் வந்ததை தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகத் திகழும் பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் எனும் இஸ்லாமிய நாட்டில் விழா எடுத்து சிறப்புச் செய்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு பொன்னாடையினை பிரசன்னா அணிவித்தார். புதிய நிலா பத்தாம் ஆண்டு மலரை ஜெயந்தி மாலா சுரேஷிற்கு வழங்கினார் மு ஜஹாங்கீர்.

குறள் சொல்லும் நேரம், பாரதி குறித்த இன்று ஒரு தகவல், பாரதியின் தேச பக்திப் பாடல்கள், சாரே ஜஹான்சே அச்சா எனும் விடுதலை வேட்கைப் பாடல், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏ. முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், ஜெகனாதன், பிரசன்னா, விஜயராகவன், விஜயேந்திரன், பாலா, சுந்தர் உள்ளிட்ட குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications