For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரகாட்டம்... சிலம்பாட்டம்... சிங்கப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா

சிங்கப்பூரில் தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை உற்சாகமாக களைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: கரகம், கோலாட்டம் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு நடனங்களுடன் சிங்கப்பூரில் ஹவ்காங் பகுதியில் பொங்கல் திருநாள் களைகட்டியது.

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா, தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரில் தமிழ் நான்கு ஆட்சி மொழிகளில் ஒன்று. பொங்கல் பண்டிகைக்கு அரசே அதிக முக்கியத்துவம் தருகிறது. எனவேதான் தமிழர் திருநாள் மிகவும் உற்சாகமாக பாரம்பரியத்துடன் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் கொண்டாட்டம்

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதம் முழுவதும் அங்கு தமிழகர்கள் இணைந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.

சிங்கப்பூரில் பொங்கல்

சிங்கப்பூரில் பொங்கல்

நேற்று 21ஆம் தேதியன்று பொங்கோல் சமூக மன்ற இந்திய செயற்பாட்டுக் குழுவால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹவ்காங் பகுதியில் உள்ள பொங்கோல் சமூக மன்றத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பொங்கல்பானைகள்

பொங்கல்பானைகள்

பொங்கோல் சமூக மன்ற இந்திய செயற்பாட்டுக்குழு தலைவர் திரு. திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பெடோக் ரிசர்வோயர் - பொங்கோல் அல்ஜுனிட் குழுத்தொகுதி ஆலோசகர் திரு.விக்டர் லாய் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பாரம்பரிய விளையாட்டுக்கள்

பாரம்பரிய விளையாட்டுக்கள்

கோலம், உரியடித்தல், கரும்பு உடைத்தல், சிலம்பம் உள்ளிட்ட தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. கரகம், கோலாட்டம் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு நடனங்கள் சிறப்பாக நடைபெற்றன.

சிறுவர், சிறுமியர் நடனம்

சிறுவர், சிறுமியர் நடனம்

வண்ண வண்ண உடையணிந்து சிறுமியர்கள் தலையில் கரகம் வைத்து ஆடியது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. தேசம் கடந்து வசித்தாலும் தமிழர் திருநாள் பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Pongal festival celebrated in hougang, Singapore.Pongal is celebrated mostly in South India over four days, by farmers who give thanks to Surya the Sun God and giver of life, for the blessings of a rich harvest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X