For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரொட்டியுடன் சாப்பிட சிம்பிள் சப்ஜி

By Super
Google Oneindia Tamil News

-ராதா ஸ்ரீராம்

சமையல் என்பது கடல் போல. வித விதமாக சமைதுக்கொண்டே போகலாம். காய் நறுக்குவதை கொஞ்சம் மாற்றி பாருங்கள், அதன் சுவையும் அதற்கு ஏற்றார்போல் மாறும். எந்த சமையல் முறையையும் பார்த்தவுடன் இது தான் எனக்கு தெரியுமே என்று நினைத்தால், புதிதாக எதையுமே கற்றுக் கொள்ள முடியாது.

உங்களுக்கு தெரிந்த பதார்த்தையே எப்படி பண்ணுவது என்று சொல்லப் போகிறேன், ஆனால் நிச்சயமாக இதன் சுவை தனித்து இருக்கும். செய்து பார்க்கலாமா....

ரொட்டி சாப்பிடுவது உடம்புக்கு நல்லது, ஆனால் அதோட சாப்பிட பண்ணும் சைடு டிஷ் எண்ணெய் மிக்கதாக இல்லாமல் இருந்தால்தான்....

Recipe for Simple Sabji

சிம்பிள் சப்ஜி

சிம்பிள் சப்ஜி தேவையானவை

உருளை கிழங்கு(பெரியது) - 2
வெங்காயம்(பெரியது) - 2
காலி ஃப்ளவர்(சின்ன பூ) - 1
தக்காளி (பெரியது) - 2
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
தனியா பொடி - 1 ஸ்பூன்

காய்களை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு சீரகம் தாளித்துக் கொள்ளவும். முதலில் வெங்காயத்தை வதக்கவும். பிறகு உருளை, காலி ப்ளவர், தக்காளியை ஒரு நிமிட இடைவெளியில் வரிசையாகப் போட்டு வதக்கவும்.

Recipe for Simple Sabji

இப்பொழுது மேல் சொன்ன பொடிகளும், உப்பும் போட்டு, ஒரு டம்ப்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். மூடி வைத்தால் சீக்கிரம் வேகும். உருளை கிழங்கு நன்று வெந்து நசுங்கும் பக்குவம் வந்தவுடன், கொஞ்சம் மசித்து விடவும்.

தண்ணீர் வற்றி இருந்தால் கொஞ்சம் விட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கி மேலாக கொத்தமல்லி தழை போட்டு மூடி வைக்கவும். சாப்பிட்டு ருசி எப்படி இருந்தது என்று கண்டிப்பாக சொல்லவும்.

English summary
Are you wondering what side dish to prepare for chapati, roti and parathas, here you try a recipe of Potato Cauliflower Curry sabji.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X