தமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்
ஹூஸ்டன்: திருக்குறள் விளையாட்டு என்ற பெயரில், தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ஒரு போட்டியை தமிழ்நாடு அறக்கட்டளை-ஹூஸ்டன் கிளை சார்பில் கடந்த வாரம் இறுதியில் (ஏப்ரல் 6-7) நடத்தப்பட்டது.
இதில், ஹூஸ்டன் மற்றுமல்லாது, சுகர்லேண்ட், கேட்டி , சைப்ரஸ், போமான்ட், போன்ற நகரங்களில் இருந்தும் பிள்ளைகள்-பெற்றோர்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். அதிகமான குறளையும் அதன் பொருளையும் கூறும் சிறார் மற்றும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு, ஒரு குறளுக்கு ஒரு டாலர் என்ற பரிசை வாரி வழங்கியது, தமிழ்நாடு அறக்கட்டளை. அதுமட்டுமல்லாமல், அதிகமான குறள்களை விளக்கிய பிள்ளைகளின் தாய்மார்களுக்கு திருவள்ளுவரின் உருவம் நெய்யப்பட்ட பிரத்தியேக புடவை ஒன்றை பரிசாக வழங்குகிறது.

இந்நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள், தமிழன் என்ற பெருமிதத்தில் திளைத்தார்கள் என்றால் அது மிகை ஆகாது. இதுகுறித்து தமிழ்நாடு அறக்கட்டளை-ஹூஸ்டன் கிளையின் தலைவி திருமதி. மாலா கோபால் கூறுகையில், " இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே இயற்றப்பட்ட திருக்குறள் இன்றும் நம் வாழ்விற்கு பொருந்துமாறு இருப்பது வியக்கத்தக்கதே. இப்படி ஒரு பொக்கிஷத்தை நமக்காக விட்டுச்சென்ற திருவள்ளுவருக்கு நன்றி சொல்ல தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியர்களாக நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
திருவள்ளுவர் நமக்கு செய்த இந்த பெரும் உதவியை நாம் ஈடு செய்ய ஒரே வழி, அவர் நமக்கு போதித்த திருக்குறள்களின் சிறப்பை நம் சந்ததியினருக்கு அறிவூட்டுவதே. ஐந்தே வயதான ஒரு பிள்ளை 430க்கும் மேலாக குறள்கள் கூறியது மெய்சிலிர்க்க வைக்கிறது " என்று கூறினார்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அன்னையர் தின விழாவில் கொடுக்கப்படும். இந்த விழா மே மாதம் ஐந்தாம் தேதி மதியம் மூன்று மணி அளவில் வெஸ்ட்ச்செஸ்டர் அகாடெமி, 905 யார்க்செஸ்ட்டர் டிரைவ், ஹூஸ்டன் 77079ல் நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழகத்திலிருந்து குறல்சூடி உமையாள் என்ற இளம் பேச்சாளர் சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் அனைவரின் வரவையும், பங்கேற்ப்பினையும் தமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் அலுவலர்கள் எதிர்நோக்குகின்றனர் என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications