இத்தாலி 'எக்ஸ்போ மிலானோ 2015' கண்காட்சியில் அனைவரையும் கவரும் அமீரக அரங்கு
மிலானோ: இத்தாலியில் நடைபெற்று வரும் எக்ஸ்போ மிலானோ-2015 கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரக சார்பில் பாலைவன மணல்திட்டு போன்று பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் எக்ஸ்போ மிலானோ 2015 என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரக அரங்கு இடம்பெற்றுள்ளது. இந்த அரங்கு பாலைவன மணல் திட்டு போன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. கண்காட்சிக்கு வரும் அனைவரையும் இந்த அரங்கு கவர்ந்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் அமைத்துள்ள அரங்கு 3 வகையான கருத்துக்களை வெளியிடும் வகையில் உள்ளது.

கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலத்தையும் குறிக்கும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘கடந்த காலம்‘ என்ற தலைப்பில் அமீரகத்தில் கடந்த நூற்றாண்டின் மத்திய மற்றும் இறுதிக்காலத்தில் தண்ணீர் பெறுவதற்காக மக்கள் பட்ட துன்பங்களை விவரிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ‘நிகழ்காலம்‘ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அமீரகம் கடந்த காலத்தை வென்றெடுத்து தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ‘எதிர்காலம்‘ என்ற தலைப்பில் அரசின் எதிர்கால திட்டம் மற்றும் செயல்பாடுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலி சென்றுள்ள தமிழர்கள் ஜெயவேலு தலைமையில் அமீரக அரங்கை பார்வையிட்டுள்ளனர்.

கண்காட்சி பற்றி ஜெயவேலு கூறுகையில்,
ஐக்கிய அரபு அமீரக அரங்கு மிகவும் அருமையாக உள்ளது. அமீரக மக்களின் கலாச்சாரத்தை சிறப்பாக சித்தரித்து உள்ளார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய அரங்க. இந்த கண்காட்சிக்கு வரும் அனைவரும் அமீரக அரங்கை பாராட்டுகிறார்கள் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications