படித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படிப்புக்கும், நமது திறமைக்கும் சற்றும் சம்பந்தம் இருக்காது என்பது ஒரு பொதுவான கருத்து. உண்மையும் அதுதான். நமது திறமை ஒன்றாக இருக்கும், நாம் படித்தது ஒன்றாக இருக்கும்.

பொறியியல் படிப்பு படித்த பலரும் இன்று அவரவர் சார்ந்த துறையில் இருப்பதில்லை. மாறாக வேறு வேறு துறைகளில்தான் கோலோச்சிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் வருகிறார் வீரமணி.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ல ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. சிவில் என்ஜீனியரிங் படித்துள்ளார்.

சாக் ஆர்ட்

சாக் ஆர்ட்

இவரிடம் சாக்பீஸைக் கையில் கொடுத்து விட்டு கடைக்குப் போய் கால் கிலோ தக்காளி வாங்கி விட்டு திரும்பினால் அதற்குள் அந்த சாக்பீஸில் ஏதாவது ஒரு சிற்பத்தை வடித்து வைத்து விட்டுக் காத்திருப்பார். அப்படி ஒரு அசாத்திய திறமை இவரிடம்.

சாக் கலைஞர்

சாக் கலைஞர்

இவர் சாக்பீஸ் ஆர்ட்டில் தனது திறமையை நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். விதம் விதமாக சாக்பீஸ் சிற்பங்களை வடித்து வைத்து அசத்துகிறார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

இவரது ஒரே ஆசை கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான். சாக் ஆர்ட்டில் நான் கின்னஸ்சாதனை படைக்க வேண்டும் என்று கூறும் வீரமணி அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அதற்கு அனைவரின் ஆலோசனை, ஆதரவையும் அவர் நாடுகிறார்.

நமது வாசகர்

நமது வாசகர்

வீரமணி நமது பெருமை மிகு வாசகர். கடந்த 4 வருடமாக நமது தளத்தை விடாமல் படித்து வரும் தீவிர வாசகர். இது அவரது முகநூல் பக்கம். .. பாராட்டுங்கள், ஆலோசனைகளையும் கூறுங்கள். சாதனை படைக்கட்டும் வீரமணி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This is Veeramani, hails from Vedarnyam. He is a Chalk artist and willing to achieve many in this art. He is our proud reader too.
Please Wait while comments are loading...