For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்போடியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கம்போடியாவில் நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு-வீடியோ

    சியாம் ரீப்: கம்போடியாவில் 60 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்ற 2 நாட்கள் உலகத் தமிழர் மாநாடு கடந்த மே 19, 20-ல் கோலாகலமாக நடைபெற்றது.

    உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில் உணவகம் ஒன்றில் "உலகத் தமிழர் மாநாடு" நடைபெற்றது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தனர்.

    World Tamilar conference held in Cambodia

    தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்து கிடக்கும், பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமைந்தது. பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், லண்டன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி, போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்தனர்.

    World Tamilar conference held in Cambodia

    தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, Federation of International Tamil Association, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம், கோட்டோ (Global organization of Tamil Origin) மற்றும் "Global organization for Tamil youth" போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது..

    ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட விழா மலர் வெளியிடப்பட்டது. உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் தங்கர்பச்சான், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    World Tamilar conference held in Cambodia

    மேலும் ஈழத்தமிழ் மன்றமான சைவநெறிக்கூடம், ஈழத்தமிழர் தனித்துவத்தையும், தமது தமிழ்வழிபாட்டுத் தீர்மான நோக்கத்தினையும் வெளிப்படுத்தியது. பேர்ன் நகரில் அமையவிருக்கும் 'தமிழர் களறி" எனும் நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் திட்டத்தினை விரிவாக விளக்கியது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் இவ்விளக்கம் இதழாகப் பதிப்பெடுத்து கையளிக்கப்பட்டது.

    உலகெங்கினும் தமிழர்கள் வழிபடும் திருக்கோவில் முழுவதும் கருவறையில் செந்தமிழ்த் திருமறை ஒலிக்க இங்கு கூடியுள்ள தமிழார்வலர்கள் முயலவேண்டும் என சைவநெறிக்கூடத்தின் வேண்டுகோள் இந்மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

    World Tamilar conference held in Cambodia

    சைவநெறிக்கூடத்தின் பேர்ன் சுவிற்சர்லாந்து நடுவத்தின் சார்பில் தில்லையம்பலம் சிவகீர்த்தி, ஐக்கியராச்சியக் கிளையின் சார்பில் ஸ்ரீரஞ்சன் பங்கேற்று உரையாற்றினர்.

    English summary
    World Tamizh conference held in Cambodia on May 19,20.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X