ஞாபகம் வருதே..
Subscribe to Oneindia Tamil
கூட்ட நெரிசலில்
என் மீது நீ
குவித்த பார்வை..
வீதியோரம் விளையாட்டாய்
நீ வீசிய புன்னகை..
என் தங்கையிடம்
நீ தந்து விட்ட
வாழ்த்து அட்டை..
என் தேர்வின் வெற்றிக்காக
நீயிருந்த விரதம்..
வெற்றி பெற்ற பிறகு
நேர்ச்சையாய் கோவிலில்
நீ ஏற்றி வைத்த
நெய்விளக்கு..
என்னை வேவு பார்க்கும்
உன் தோழிகள்..
இப்படி
நிறைய அடையாளங்கள்
இன்று வரை
நம் காதலை
கெரளவப்படுத்திக்கொண்டுதானிருக்கிறது..!!
- அபிரேகா அலாவுதீன்([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications