நேற்று நாங்களும் நாளைய நிலவுகளும்...!
காலை
கடலும் கதிரவனும்
பனித்துளி படர்ந்த புல்வெளியும்...
உப்புக்காற்றும் ஊர்குயிலும்
இசைபாடும் காலை...!
ஆழக்கடலும் அங்கிருந்து
துயில்கலையும் கதிரவனும்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
அருகினில் சென்று பாராமல்
அப்போது...
காலைவிடியாது எனக்கு...!
தூரத்தில்...
கட்டுமரத்தை தரையிறக்கி
அள்ளிவந்த மீனையெல்லாம்
அன்னையிடம் கொடுத்துவிட்டு
அண்ணார்ந்து பார்த்துக்கொண்டே
"அப்பாட" என்று சொல்லி
உப்பு நீரும் முத்துவியர்வையும்
வடிந்த முகத்தை
தோளிலிருந்த
துண்டால் துடைத்துவிட்டு
என்னைக்கண்டு
கையசைத்துக்கொண்டே
கூப்பிடுவான் என் பள்ளித்தோழன்..!
இதுவரை...
"குருவிநேவி" அடிக்க
முள்ளில்பாய்ந்து
ஒருதடவை
"கிபிர்" விமானம் வட்டமிட
வடலிக்குள் விழுந்து
ஒரு தடவை
ஆனையிறவிலிருந்து
"செல்" அடிக்க
வேலியைக் கடந்து
ஒருதடவையென
மூன்று தடவைகள்
பழுதாய்ப் போன
இரண்டுவாரங்களுக்குமுன்
வாங்கிய - என்
புது மிதிவண்டியில்
நானும் அவனும் பள்ளிசெல்வோம்...!
வெள்ளைச் சீருடையில்
சின்னச் சின்ன நிலவுகள்
வீதியெங்கும் மெதுவாகநகர
வேகமாக நாங்கள்
முந்தியடித்துக்கொண்டு போவோம்..!
ஆசிரியர் பாடம் நடத்த
பயங்கர இரைச்சலுடன்
பயம்காட்ட "கிபிர்" வரும்
வானத்தில் வட்டமிட
வளமைபோல..
திட்டமிட்ட பாடங்கள்
பாதியில் நின்றுபோகும்..!
அன்றும் அப்படித்தான்...
பயங்கர இரச்சலுடன்
அது வந்தது...!
நாங்கள் பயந்தோடி
உயிர்காக்க
வெளியேறி வேலிபாய்ந்தோம்
அல்லதுபோனால்...
அன்றுவந்த
அந்திவானமாய்
வெள்ளைச் சீருடைநிலவுகள்
சிவந்திருக்கும்
கனவுகள் சிதைந்தபடி
வாழ்வும் முடிந்திருக்கும்...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications