தீயினில் ஒளிர்ந்த தீபங்களே!
கனவு கண்டோம் நாம்
கண் மூடி வாய் பிளந்து
கனவு கண்டோம் நாம்!
நீங்கள் வளர்ந்து
நாடாள்வதாயும்,
உங்கள் காலத்தில்
இந்தியா ஒளிர்வதாயும்.
சின்ன சின்ன வித்துகளாய்
முளைப்பாரி போட்டோம்.
முளைக்க முன்னே
செல்லரித்துப் போனதென்று
சொன்ன சேதி
பொய்யாகாதோவெனக்
கனவு கண்டோம்.
கூரைக் கட்டடத்தில்
குத்து விளக்கிருக்க
வானைத் தொடும்
அடுக்குமாடிக் கட்டடத்துக்கும்,
வானூடு போகும்
செய்மதிகளுக்கும்
கனவு கண்டோம்.
மரணத்தின்
வாசற்படிகளில்
உங்களை இருத்திவிட்டு,
மனித குல மேம்பாட்டிற்காய்
ஆலைகள் அமைக்கவும்
சாலைகள் போடவும்
கனவு கண்டோம்.
உங்களை எரித்த தீ
எங்கள் ஏழ்மையையும்,
செல்லரித்துப்போன
அரசியலையும்,
செல்லாக்காசான
தலைவர்களையும்
எரித்திடாதோவெனக்
கனவு கண்டோம்.
ஒவ்வொரு நிகழ்வின் பின்னும்
அனுதாபக் கண்ணீரையும்
ஆறுதல் வார்த்தைகளையும்
எவர் மீதாவது பழிபோடும்
அறிக்கைகளையும்
சமர்ப்பித்துவிட்டு
இத்தோடு தீரும் அவலமென்று
கனவு மட்டுமே கண்டோம்.
- ஈழநாதன் ([email protected])
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications