வயதுக்குவரும்முன் காதலித்தேன்
சரியாக
முப்பது ஆண்டுகள்
பிரிந்த நினைவுகள்
நெருப்புக் கொப்புளங்களாய்
மூழ்க மூழ்க
மூச்சுத்திணறல்
ஏன் சந்தித்தோம்
ஏன் பிரிந்தோம்
ஏன் வருந்துகிறோம்
எந்தப் பந்தமும்
இல்லாமல்
எப்படி நாம்
பாதிக்கப்பட்டோம்
எப்படி நமக்குள்
பந்தம் வந்தது
உனக்குத்தெரியுமா
அதிகாலைக்காக
உறக்கத்தைக் குறைத்தேன்
உறக்கத்திலும்
உன்னையே அடைகாத்தேன்
மெளன இருட்டில்
பூனைபோல் நடந்து
உன்
தரிசனத்திற்காகத் தவித்தேன்
இரத்தச்சிவப்பில்
உன்
அடிமடி அசையாதா
என
இலையிருட்டில்
விழிப்பாவையை
உருட்டி உருட்டி
வருத்தினேன்
சில நேரங்களில்
உன் நடையில் தடுமாறி
மனமும் நானும்
களைத்துவிழுந்தோம்
எங்கே சாப்பிடுகிறாய்
என்ன சாப்பிடுகிறாய்
என்பதெல்லாம் எங்களுக்குள்
ஒரு கற்பனைக்காவியம்
எங்கிருந்து வந்தாய்
என்பதில்கூட
இன்னும் நீள்கிறது சர்ச்சை
உன்னைத்தான் நான்
வயதுக்கு வரும்முன் காதலித்தேன்
வயது முதிர்ந்தும்
காதலித்துக்கொண்டிருக்கிறேன்
காதலி
காதல்
ஒருசிலரைப்போல
நம்மிடத்தில்தான்
தோல்வியே இல்லாமல் தொடர்கிறது
வண்ணக்கைதியாய்
வரித்துக்கொண்டதில்
வியப்பில்லை
மாரழகில்
மயங்கிய நொடிகளில்
அன்னாந்து அன்னாந்து
கழுத்து வலியால் கர்வப்பட்டிருக்கிறேன்
அழகின் முழுமையை
அடையும் நோக்கில்
அத்துமீறிய குற்றத்திற்காக
காதல் கைதிநான்
ஆயுளின் அந்தநொடிவரை
காதல்தாகம்
இளமையாய் என்னுடன்
ஒரு காதல்கைதி
ஆயுள் கைதியானதில்தான்
நான் விடுதலையானேன்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications