வெற்றியில் அடங்கு: தோல்வியில் திருந்து!
வெற்றி, தோல்வி குறித்து அனுபவப் பொன்மொழி என்ற தலைப்பில் முதல்வர்கருணாநிதி கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதை:
அந்தக் கவிதை:
எங்கிருந்தாய்?
எங்கிருக்கிறாய்?
எங்கும் பறந்திட
இறக்கை உனக்கு,
தங்கும் இடமெனக்
கலசத்தில் அமர்வாய்!
வாடகையாக
வழங்குவாய் எச்சம்.
கவலைப்படுவதில்லை; கலசம்
கலங்கித் தவிப்பதுவுமில்லை.
கரையும் எச்சம், மழையில் என்று;
காத்திருக்கும் பாவம்!
பொறுத்தவன் பூமியாள்கிறான்
வெறுத்தவன் வேட்டி, சட்டையைக்
கிழித்துக் கொள்கிறான் - தன்னைத் தானே
அழித்துக் கொள்கிறான்!
கலசம், அதற்காக கை தட்டிச் சிரிக்கவில்லை
கண்கூட்டில் நீர் ததும்ப நிற்கிறது!
"வெற்றியில் அடங்கு
தோல்வியில் திருந்து!"
நெற்றியில் அடிக்கிறது;
நீண்ட அனுபவப் பொன்மொழி!
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications